பக்கம்:தாய்லாந்து.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்த நாடு முழுதும் இரைந்து கிடக்கிறார்கள். புத்த நாகரிகத்தின் தொட்டில் இந்த சாங்மாய்தான்” என்றார் சொம்பட்.

பிட்சுக்கள் எங்கும் தனியாகப் போகமாட்டார்களாம். இரண்டு பேராகவோ அல்லது கும்பலாகவோ சேர்ந்தேதான் போவார்களாம். தனிமையில் செல்வது பிரம்மசரியத்துக்குச் சோதனையாக முடியலாம் என்ற அச்சமே காரணமாம்.

“யாராவது ஒரு புத்த பிட்சுவைப் பார்த்துப் பேசவேண்டும். அது முடியுமா?” என்று சொம்பட்டிடம் கேட்டேன். அந்த ஆசை அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே நிறைவேற்றி விட்டார் அவர்.

யாம் அரிசி உலகப் பிரசித்தமானது. அந்த அரிசி விளைவது இங்கேதான். பல நிலங்கள் வானம் பார்த்தவை. வங்கிகள் விவசாயிகளுக்கு நிறையக் கடன் தருகின்றன. ஆனாலும், வங்கியின் பிடியில் சிக்கிக் கொண்டு விவசாயிகள் ரொம்ப

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/57&oldid=1075223" இலிருந்து மீள்விக்கப்பட்டது