பக்கம்:மாணவர்களுக்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கி.ஆ.பெ. விசுவநாதம்

27

காலை 9 மணிக்கு ஒரு மனிதன் வெயிலில் நின்றால் அவன் உயரம், அவன் நிழல் அருகிலிருக்கும், முயன்றால் அதைப் பிடிக்க முடியாது. நடந்தால் அதுவும் நடந்து போய்க் கொண்டே இருக்கும். அதைப் பிடிக்க வேகமாய் ஓடினால் அதுவும் வேகமாய் ஒடிக்கொண்டே இருக்கும். எந்த வகையிலும் அதைப் பிடிக்க முடியாது. நின்றால் அதுவும் நிற்கும். திரும்பி வந்தால் அதுவும் பின் தொடர்ந்து வரும். அதைக் கண்டு பயந்து ஓடினால் அது நம்மைப் பிடிக்க வேகமாக ஓடிவரும். எப்படி இந்தப் புகழும், நிழலும்! இதிலிருந்து புகழ் தன்னை விரும்புகிறவனை அடையாது என்று தெரிகிறது. எவ்வளவு உயர்ந்த கருத்து.

ஆ. எது இழிவு?

எது இழிவு என்பது ஒரு கேள்வி. ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொன்றை இழிவு எனக் கூறுவதுண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த புறநானூற்றுப் புலவர் ஒருவர் எது இழிவு? என்ற கேள்விக்குக் கூறும் விடை நம்மை வியப்படையச் செய்கிறது. அது "ஒரு மனிதன், தன்னைப் போன்ற மற்றொரு மனிதனிடம் சென்று கையை நீட்டி, ஐயா ஒரு காசு கொடுங்கள் என்று கேட்பதுதான் இழிவு” என்கிறார். இதைவிட இழிவு ஒன்றும் இல்லையா? என்று கேட்டதற்கு, யோசித்து ஆம் ஒன்று உண்டு, அது "மானங்கெட்டுக் கையை நீட்டி, ஐயா ஒரு காசு என்று கேட்பவனிடம் இல்லை என்று கையை விரிப்பதுதான் அதைவிட இழிவு” என்று கூறியிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/26&oldid=1271766" இலிருந்து மீள்விக்கப்பட்டது