பக்கம்:தாய்லாந்து.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"அயோத்தியா? இங்கேயா?” என்று திருப்பிக் கேட்டேன்.

“ஆமாம். இங்கேயும் ஒரு அயோத்தி இருக்கிறது. ஆனால் அதை ‘அயுத்தி’ என்று உச்சரிக்கிறார்கள். பாங்காக்கிலிருந்து அயோத்திக்கு எழுபது எண்பது மைல் தூரம்தான். படகு, ரயில், கார் மூன்றிலும் போகலாம். நான் ஒரு வேனுக்கு ஏற்பாடு செய்கிறேன். அதில் எட்டு பேர் போய் வர முடியும்” என்றார்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. தயிர் சாதம், இட்லி, முறுக்கு, சீடை போன்ற உணவு சாதனங்களுடன் ஏழெட்டுப் பேர்பெரிய முஸ்தீபாய்ப் புறப்பட்டு விட்டோம். நண்பர் ஸ்ரீவேனுகோபாலன்,'ஆ'அயோத்தி! அயோத்தி! அங்கே என்னுடைய சரித்திரக் கதைக்கு வேண்டிய ஆதாரங்கள் நிறையக் கிடைக்கும்” என்று சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்டுக் கொண்டிருந்தார். ஏதோ பெரிய அட்வென்சர் செய்யப் போவது போல் ஒரு த்ரில்!

வேனில் போகும் போது, “அயோத்தியில் என்ன விசேஷம்?” என்று ஹுமாயூனிடம் கேட்டேன்.

“நம் நாட்டில் உள்ளது போல் இந்த அயோத்தியிலும் கோயில், மசூதி இரண்டும் உண்டு. ஆனாலும், இங்கு எந்த விதமான சண்டை சச்சரவும் கிடையாது. எல்லோரும் ஒற்றுமையுடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

“அந்த அமைதிக்கு என்ன காரணம் தெரியுமா?” என்று கேட்டேன் நான்.

“தெரியலையே!” என்றார்.

“பி.ஜே.பி.யும், அத்வானியும் இங்கே இல்லை; அதனால் தான்!” என்றேன்.

ஹுமாயூன் ‘குபுக்'கென்று சிரித்து விட்டார்!

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/9&oldid=1075180" இலிருந்து மீள்விக்கப்பட்டது