பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக விஞ்ஞானிகள்

23

தடித்த எழுத்துக்கள்மலும், வடக்கே தோன்றினால் தெற்கேருப்பவர்களுக்குத் தெரியாமலும் போகலாம். அதை ஒப்புக்கொள்வதானால், இரண்டு ஏற்பாடுகளிலும் இருக்கின்ற உண்மைகள் பொய்யாய் விடும் என்ற அச்சத்தாலே அதை அப்படியே சாதிக்கிறார்கள் என்று தான் நாம் நினைக்கவேண்டியிருக்கின்றது. எனக்குத் தெரிந்தவரை, அவர்கள் ஒன்றைச் சொல்லியிருக்கலாம். அதாவது 'உலகம் உருண்டைதான்; இயேசு எந்தப் பக்கம் தோன்றினாலும், உலகம் சுற்றுகிறபோது நான்கு திசையிலும் இருக்கிற மக்கள் அவரைத் தரிசிக்கலாம் என்று மாற்றிக் கொள்ளலாம். அல்லது இயேசு பிறக்கும்பொது உலகம் சட்டையாகத் தானிருந்தது; அவர் பிறந்து வாழ்ந்து கோல்கொத்தே என்ற குன்றில் அவர் சிலுவையிலறையப் பட்டு, அவரும் உயிர் துறந்து, மீண்டும் மூன்றாம் நாள் தோன்றி உலக மக்களெல்லாம் கண்டபிறகு, உலகம் மெதுவாகச் சுற்றத் தொடங்கியது' என்று மாற்றியிருக்கலாம். ஆனால் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களாக இருந்தால்கூட, விஞ்ஞான ரீதியாகக் கண்டவைகளைச் சொன்னால், அவர்கள் மேல் பழி சுமத்தி சிறைக்கனுப்பவோ,சிரச்சேதம் செய்யவோ lnquisition என்ற சபை ஒன்றிருந்தது. இயேசுபிரான் என்ன சொல்லியிருந்தாலும் அதற்கு போப் ஆண்டவர் கூறும் வியாக்கியானந்தான் முடிவானது. அதை எதிர்த்து யாரும் பேசக்கூடாது. இதுதான் அன்றைய நிலை. Protestant இயக்கத்தைக்கண்ட மார்டின் லூதரே கூட மன்னர் முன் நிறுத்தப்படவில்லையா? ஆகவே, விசாரணை மன்றத்துக் கழைக்கிறார்கள் என்றால் மரணமேடைக்கு அழைக்கிறார்கள் என்று பொருள்.

அந்த நிலையிலே தான், 1633ம் ஆண்டு, ஜுன் திங்கள், 22ம் தேதி காலை ரோமாபுரியில் மினர்வா கிருஸ்து மடாலயத்தில் சபை கூடியிருந்தது. அறுபத்தொன்பது வயது நிரம்பிய கிழவர் இழுத்து வரப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறார். கைகால்கள் நடுங்குகின்றன, உதடு உலர்ந்து போயிருக்கிறது,