பக்கம்:ஊரார்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.8ġ தெரியல்லே. தபால்காரர் வந்து லெட்டர் கொடுத்து விட்டுப் போனர். அதைப் படிச்சார் அதிலேருந்து இப்படி ஆயிட்டாரு ' "என்னடா விசயம்?: தெரியலையே. 'அப்புறம் என்ன நடந்தது? "நாட்டாமைக்காரரும் மணியக்காரரும் வந்தாங்க. கதவைச் சாத்திக்கிட்டு மூணுபேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க முகமும் சரியில்லே......” "என்னடா அதிசமாயிருக்கு? என்ன விசயம்டா? தெரியலையே: "என்ன பேசினங்க: "தெரியலையே. கதவைச் சாத்திக்கிட்டு ரகசியமாப் பேசிக்கிட்டு இருந்தாங்க... "எல்லோரும் போயிட்டாங்களா? "போயிட்டாங்க. மாமா மட்டும் அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்க்ாரு.... - 'ம்...பாப்பம்; பாராத்தா செத்தாலும் பொளுது விடிஞ்சாத் தெரியுது என்ருர் சாமியார். ராத்திரியே தெரிந்து விட்டது. இரவு சாப்பாட்டுக்கப் புறம் குமாருவின் மாமன் வேதாசலம் ஏழெட்டுப்பேரோடு சாமியாரைப் பார்க்க வந்தான். - "ஒரு முக்கியமான சமாசாரம் சாமி. என்ருன் வேதாசலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/59&oldid=758744" இலிருந்து மீள்விக்கப்பட்டது