பக்கம்:பாரதி லீலை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார தி சரி தம் ۔سی-سع۔--سینچم سم~-- ல்ே டாண்டிய நாட்டிலே பிறந்த ஒவ்வோருயி ரும் கவி. பாண்டியகாட்டின் கல்லும் மண்ணும் கவிபாடும் சக்தியுடையன ” இது நம் கவிஞர் தில கம் சுப்பிரமணிய பாரதியாரின் வாக்கு பாண்டி நாடும் தமிழும்’ என்னும் பொருள்பற்றி ஒரு சம யம் பாரதியார் ஒரு கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினர். அப்பொழுதுதான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது பூரீமான் திரு. வி. கலியாண சுந்தர முதலியார் கூறியது. அத்தகைய பாண்டி நாட்டிலே திருநெல்வேலிக் கடுத்த எட்டயபுரம் சமஸ்தானத்திலே நம் பாரதி யாரின் தந்தையார் வித்வானுயிருந்து வந்தார். அவர் பெயர் சின்னஸ்ாமி ஐயர் என்பது. அவர் பிராமண ஜாதியிலே பிரஹசரண வகுப்பைச் சேர்ந்தவர் ; ஆங்கிலம் அறிந்தவர் , தமிழிலே பாண்டித்யமுடையவர் ; மேற்கு நாட்டுக் கணி தத்திலே நிபுணர் ; பெருங்குண முடையவர் ; எட்டயபுரத்தில் பஞ்சாலே ஏற்படுத்தியவர். அவர் எட்டயபுரம் கிராம முன்சீபு பூரீ ராம சாமி ஐயரின் குமாரி பூரீமதி லக்ஷ்மியை முதல் தாரமாகக் கலியாணம் செய்துகொண்டார். 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/56&oldid=816576" இலிருந்து மீள்விக்கப்பட்டது