பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இ.ல் ஆ. சில நிகழ்ச்சிகளே, ஒருவரை தன் திறமையில். ஊக்கத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்கின்றது என்பதற்கு நியூட்டன் விதிவிலக்கல்ல. இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டால் போதும். தன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஒரு முரடன் நியூட்டனை அடித்து விட்டான். நியூட்டன் திருப்பி விட்டான் ஒரு குத்து. கீழே விழுந்துவிட்டான் முரடன். ஆனால், மற்ற பிள்ளைகளெல்லாம்: கீழே விழுந்து கிடப்பவன் நியூட்டன் தான் என்றெண்ணி அருகில் வந்து பார்த்தபோது விழுந்திருந்தவன் நியூட்ட னல்ல. அந்த முரடனே விழுந்திருந்தான். மற்ற பிள்ளைகள் அதிர்ச்சியுற்றது ஒருபுறம் இருக்கட்டும். நியூட்டனுக்கே ஒரு புதிய பலமும் தெம்பும் வந்துவிட்டதைப் போன்ற ஒரு. நம்பிக்கைப் பிறந்துவிட்டது. இரண்டாண்டுகளே அங்கே. படிக்க முடிந்தது. அந்த நேரந்தான் தாய் இரண்டா வது முறையும் கைம்பெண் ஆகிவிட்டாள். நிலங்களையும், மாடு கன்றுகளையும் பார்த்துக்கொள்வதற்கு ஆள் இல்லாத காரணத்தால் ஊருக்கே வரவேண்டியதாயிற்று. கல்வி கற்பதில் அவருக்கிருந்த ஆர்வம், கன்று காளைகளைக் கவனிப். பதில் ஏற்படவில்லை. கல்வியிலேதான் கவனமிருந்தது. இதையறிந்த கேம்பிரிட்ஜ் கல்லூரியின் உறுப்பினரா யிருந்த அவருடைய தாய்மாமன் எஸ்கோ என்பவர் கல்லூரியில் சேர்த்துவிட்டார். அங்கு சேர்ந்த நியூட்டன், பண்ணையில் விளுகிவிட்ட நான்காண்டு பாடங்களையெல்லாம்: படித்து 1665ல் பி. ஏ. பட்டம் பெற்றர். இப்போது கணிதத்தில் குறிப்பிடும் Binominal Theory, Calculus Theory storp sororool-ush கண்டுபிடித்து உலகுக்குக் கூறினர். . அடுத்து அவர் கண்ட அதிசயம் ஒன்றுண்டு. ஒருநாள் அவர் தன் தோட்டத்தில் உட்கார்ந்திருந்தபோது மரத்தி லிருந்து ஒரு ஆப்பிள் பழம் கீழே விழுவதைக் கண்டார். இதற்குமுன் எத்தனையோ கோடி ஆப்பிள் பழங்கள் கீழே விழுந்திருக்கும். எத்தனையோ கோடி பேர் பார்த்திருப்