பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் 67 ஒருநாள் கோழிகள் முட்டையிட்டு அடைகாப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து, சில ஆராய்ச்சிகள் செய்வதற். காகக் கடைக்குச் சென்ருர், மருந்துகள் எல்லாம் விலை அதிகமாக இருந்த காரணத்தால், அதைச் சரிக்கட்டுவதற் காகச் செய்தித்தாள்களே ஒடும் ரயிலில் விற்பதற்காகச் சில சலுகைகளைப் பெற்று, போர்ட் ஹாரோன் என்ற ரயில் நிலையத்துக்கும் டெட்ராயிட் என்ற ரயில் நிலையத்திற்கும் இடையிலே ஒடிக்கொண்டிருந்த ரயிலில் பத்திரிகைகளை விற்கும் உரிமையைப் பெற்று, அந்த ஒடும் வண்டியிலியே ஒரு சிறிய அச்சகத்தை நிறுவி, பத்திரிகை விற்றுக்கொண்டு வந்ததோடு சாமான்கள் போடும் பீெட்டியில் ஒரு சிறிய ஆய்வுச்சாலே (லேபரட்டரி) வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டும் வந்தார். முதன் முதலில் தந்தி அடிப்பதைப் பற்றி ஆராய்ந்தார். ஆனல் நாம் குறிப்பிட்டிருந்தபடி கோச்சு எரிந்து பெரிய விபத்து நடந்ததன் காரணமாக, கண்டக்டர் விட்ட அடியில் எடிசனுக்கு சாகும் வரையில் காது மந்தமாகவே இருந்தது என்பதை முன்பே கூறி யிருக்கிருேம். எந்த ரயில் நிலையத்தில் அடிவாங்கி நின்றருே அதே ரயில் நிலையத்தில், 1863 ல் வேகமாக வருகிற வண்டியின் தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடு வதைக் கண்டு, வண்டி வந்து அந்தக் குழந்தைமேல் ஏறு வதற்குள்ளாக ஒடிப்போய், அந்தக் குழந்தையைத் தூக்கிக் காப்பாற்றிவிட்டார். அந்தக் குழந்தை வேறு யாருடையது. மல்ல. அதே ரயில் நிலேய அதிகாரி மெகன்சியின் குழந்தை. அதல்ை அந்த ரயில் நிலையத்திலேயே தந்தி பிரிவில் வேலே கிடைத்தது. அதை எடிசன் விரைவில் கற்றுக்கொண்டு நல்ல பெயரும் எடுத்துக்கொண்டார். பகல் எல்லாம் வேலே. பகலில் வேலை செய்துவிட்டு இரவில் தூங்கவேண்டியிருப்ப தால் இரவில் ஒடும் வண்டிகளுக்குக் கைகாட்டி தருவதற்காக ஒரு கெடியாரத்தையும் அதன் துணைகொண்டு கைகாட்டி சாயவும் அதைப் பார்த்து வண்டிகள் வரவும் போகவுமான, ஒரு அற்புதமான பொறியைக் கண்டுபிடித்து அமைத்துத் தந்தார். சின்னுட்டி என்ற ரயில் நிலையத்தில் எலிகள்