பக்கம்:ஊரார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 காலேயில் இருட்டு அழியுமுன் அவுட் போஸ்ட் பழனி வந்தான். பல் துலக்க வேப்பங்குச்சி ஒடிக்கப் போனன். - வேப்பஞ் செடியை ஒடிக்காதே. இப்பத்தான் தல்ை தூக்குது” என்று கூறிப் பல்பொடி எடுத்துக் கொடுத்தார் சாமியார். "கன்னங்கரேல்னு இருக்குதே! என்ருன் பழனி. "இதிலே துலக்கிப் பாரு. பல் வெள்ளே வெளேர்னு ஆகும்! என்ருர் சாமியார். 'இது எதிலே செஞ்சுது?” ஆலங்குச்சி வேலங்குச்சி ரெண்டையும் இடிச்சு, உமித்துாள் கறுக்கி...ஆலும் வேலும் பல்லுக்குறுதிநாலும் ரெண்டும் சொல்லுக்குறுதிம்பாங்களே..." "டீ சாப்பிடlங்களா? கொண்டு வரச் சொல் லட்டுமா?: "சாப்பிடலாம். ரெண்டு நாளா எங்கே காளுேம் ஆளே? 2. "ஒரு சாவுக்குப் போயிருந்தேன்......குமாரபாளையத் துக்கு." - 'குமாருவை எங்கே காணுேம்? கோளி கூவறதுக் குள்ளே வந்துடுவானே, ராத்திரி ரொம்ப நேரம் இங்கே கண் விவிச்சுக்கிட்டிருந்தான் இல்லையா? துரங்கியிருப்பான். ஆமாம், நீ ஏன் ராத்திரி ஒண்ணுமே பேசாமெ. மெளன. மாக் குத்துக்கல் கணக்கா உட்கார்ந்துகிட்டிருந்தே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/65&oldid=758751" இலிருந்து மீள்விக்கப்பட்டது