பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ചസ്. நேரத்தில் ஆயிரக்கணக்கான மின்சார பல்புகள் எரியும் கட்சியைக் காணும் இக்காலம் வரையில், விஞ்ஞானி களுடைய எவ்வளவோ சிந்தனைப் போராட்டங்கள், விடா முயற்சி, தன்னலம் நோக்காத பொதுநலம் ஆகியவைகளின் கூட்டுச்சரக்காய் எத்தனையோ அதிசயப்பொருட்கள் நிற் கின்றன. அறுவை சிகிக்சை என்ருல் மயக்க மருந்தே கொடுக் காமல் வாளால் அறுத்த காலம் முதற்கொண்டு, எப்படி அறுவை சிகிச்சை நடக்கிறது என்பதை நோயாளி அறியா வண்ணம் மயக்கமருந்தைத் தந்துவிடும் இக்காலம் வரை ஏற்பட்ட மாற்றத்தைக் காண்போம். 'சூரியன் பூமியைச் சுற்றவில்லை; பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று கோபர்னிகஸ் என்பவர் கண்டுபிடித்த உண்மைகள் எப்படி வானிலே ஆராய்ச்சிகளுக்கு அஸ்திவார மாக அமைந்ததோ, உலகில் காணக்கூடிய எல்லாப் பொருட் களேயும் அளந்து பார்க்கவும், அதன் இழுக்கும் ஆற்றல் எத்தகையது என்பதை நியூட்டன் என்பவர் கண்டெடுத்துச் சொன்ன உண்மைகள் எவ்வாறு பெளதிக இயலுக்கு அடிப் படையாக அமைந்தனவோ, அதேபோன்று அறிஞர். ஹார்வி கண்டுபிடித்த இரத்த ஓட்டத்தின் முறை மருத்துவமுறைக்கு அடிப்படையாக அமைந்தது. அவருக்கு முன் மனிதனின் உடலிலோ, வேறெந்த உயிரினத்தின் உடலிலோ ஒடும் இரத்தத்தின் அளவைக் கண்டுகொள்ள முடியாமலிருந்தது. எந்த உண்மையும், பல நூற்ருண்டுகளாக, ஒவ்வொரு பகுதியாக ஆராயப்பட்டு வந்திருக்கிறது. அதைக்கொண்டே பின்னல் வந்தவர்கள் அவற்றையெல்லாம் முழுமையாக்கித் தந்திருக்கிறர்கள். ஆனல் ஹார்விக்கு அவர் முன்னேர்கள் செய்த எநத ஆராய்ச்சியும் பயன்படாமல் எல்லாம் ஒதுக்கித் தள்ளப்பட்டு அவராகவே முயன்று கண்டு பிடித்தவைதான் இந்த முறைகள், ! -