பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 1.கில் ஆ. யால் ஒடிக்கொண்டிருந்த இயந்திரங்களே எல்லாம் மின்சாரத் தால் ஒட்டவும், ரயில்களுக்குக் கைகாட்டிகளை இருந்த இடத்திலிருந்தே இயக்கவும், சிவப்பு பச்சை விளக்குகளை இருந்த இடத்திலிருந்தே இயக்கி, ஒடும் வண்டிகளுக்கு. வழிதந்து வகை செய்யவும் மின்சார விளக்குகளைப் பயன் படுத்தவுமான வசதியைச் செய்துகொடுத்தவர் இவர். எடிசன் உலகிற்கு அளித்த நன்கொடைகள் எண்ணி லடங்காதவை. அவர் இந்த ஆராய்ச்சியில் இறங்குவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே உள்நாட்டுப் போர் முடிந்து விட்டிருந்தது. கலகத்தின் காரணமாக நிறுத்திவைக்கப் பட்ட வணிக நிறுவனங்கள், பெரிய இயந்திரத் தொழிற் சாலைகள் எல்லாம் நன்றி சொல்லவும், பொதுமக்கள் ரொட்டிக் கில்லாதவன் ஸ்டண்ட் அடிக்கிருன் என்று பேசவுமான நில் தான் ஏற்பட்டது. ஏனெனில் எடிசன் வாழ்ந்த அன்றைய நில அப்படித்தான் இருந்தது. 1847 பிப்ரவரி 11ல்,ஒஹியோவில், மிலான் என்ற நகரில், ஸ்காட் என்ற இனத்தைச் சேர்ந்த தந்தைக்கும், டச்சு இனத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர். மூன்று ஆண்டுகள் பள்ளிப் படிப்போடு தாயும் கல்வி புகட்டினள். பள்ளியி: லிருந்த மூன்ருண்டுகளில் இவர் ஆசிரியரிடம் வாங்கிய பட்டம் கேலிக்குரியது. - குறிப்பு :- ரயில்வே கைகாட்டிகளில் சிவப்பும்-பச்சையும் பயன்படுத்துவானேன் என்ற விபரம் பலருக்குத் தெரியாமலே இருந்தது. அந்த இரண்டு நிறங்கள்தான் எவ்வளவு தூரத்தி லிருந்து பார்த்தாலும் அதன் உண்மையான நிறம் அப்படியே தெரியும். வேறு நிறங்களாக இருந்தால் கொஞ்சம் மாறித் தெரிந்தாலும் தெரியலாம். உதாரணத்திற்கு நீல நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் எடுத்துக்கொள்வோம். அதைவிட்டு விலகிச் செல்லச் செல்ல நிறம் மங்கலாகத் தெரியலாம். அதனாலே சிவப்பு பச்சை நிறங்களே தேர்ந்தெடுத்தார்கள். அண்மைக் காலமாக மஞ்சள் நிறமொன்றைச் சேர்த்திருக் கிருர்கள்.