பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - ξε- 6) άκ. கொள்ளும் என்ற முடிவுக்கு வந்தார். இருதயம் நிமிடத்துக்கு எழுபத்திரண்டு முறை சுருங்கவும் விரியவும் செய்து இடை விடாமல் இயங்குமானல், இருதயத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் 8640 அவுன்ஸ் அல்லது நூறு படி இரத்தம் வெளியேறி உடம்பில் ஓடவேண்டும். அப்படி ஒடும் இரத்தத்தை உடலிலிருந்து வடித்தால், அவ்வளவு இரத்தமும் நமக்குக் கிடைக்காமல், அதை வடித்து எடுத்தால் நாலு படிதான் கிடைக்கிறது. அப்படியால்ை மிகுதியாயிருக்கும் இரத்தம் எங்கே என்ற ஆய்வில் புகுந்து, இருதயத்திலிருந்து போகும் இரத்தம் உடலில் ஊறவிடாமல் மறுபடியும் இருதயத். துக்கே திரும்ப வந்துவிடுகிறது என்ற முடிவுக்கு வந்தார். இருதயத்தில் காணப்படும் இரண்டுவிதமான இரத்தம், இரண்டுவிதமான குழாய்கள் மூலம் உடம்பில் போய்ச் சேருவ: தாக இவருக்குமுன் இருந்தவர்கள் கூறினர்களே, அது உண்மையானல் இரத்தம் இருதயத்துக்குத் திரும்பி வருவ தற்கு வேறு குழாய் ஏது ? இப்படிச் சிந்தித்து இறுதியில் இரத்தம் சிகப்பு குழாய் மூலம் வெளியேறுகிறது என்றும், கறுப்புக்குழாய் மூலம் இருதயத்துக்கு வந்து சேர்கிறது என்றும் தெரிய வந்தது. ஆகையால், இரத்தம் இரண்டு குழாய்கள் மூலம் வெளியேருமல், இடது அறையிலிருந்து வெளியேறி உடல் முழுதும் சுற்றிவிட்டு வலது அறைக்கு வந்து சேர்கிறது. என்ற முடிவுக்கு வந்தார். வெளியேறும் இரத்தம் சிகப்பாகவும், உள்ளே வரும் இரத்தம் கறுப்பாகவும் இருக்கிறதே அது ஏன் என்பதற்கும் விடை கண்டார். அதாவது வெளியேறும் சிகப்பு இரத்தம் உடலெல்லாம் சுற்றிவிட்டு அதிலுள்ள அழுக்கை யெல்லாம் சுமந்துகொண்டு திரும்புவதால் கறுப்பு நிறமாய்க் காணப்படு: கிறது என்ருரி. இப்படி இரத்த ஓட்டத்தைப் பற்றிக் கூறியவை உடற்கூறு கலக்கு அடிப்படையாக அமைந்தது. 1. இரத்தம் ஈரலில் உற்பத்தியாகிறது;