பக்கம்:பாரதி லீலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வேலை யளிக்குமாறு கேட்கவே அய்யரும் ஒப்புக் கொண்டார். அதுமுதல் பாரதியார் . சுதேசமித் திரன் பத்திரிகைக்கு உதவியாசிரியரானர். இரண்டு வருஷங்கள் கழிந்தன. பாரதியார் * இந்தியா பத்திரிகைக்கு ஆசிரியரானர். சூரத் காங்கரஸுக்குப் பின் இந்தியா பத்திரிகை மிகத் தீவிரமாக எழுத ஆரம்பித்தது. அக்காலங்களில் தேச பக்தர்கள் ஒவ்வொருவராக நாடு கடத்தப் {-ft-i-Iss" & 3s. விரும்பத் தகாதவர் கையில் சிக்கி அவரால் தாம் சிறை வைக்கப் படுவதை, பாரதியார் விரும்ப வில்லை. ஆகவே அவர் தாமாகவே புதுச்சேரிக்குச் சென்ருர், அது 1908-ம் வருஷம். சுமார் பத்து வருஷகாலம் பாரதியார் புதுவையிலிருந்தார். அக்காலத்திலே தான் அவர் பெரும்பாலான கவிதைகளைப் புனேந்தார். வைஷ்ணவப் பிரபந்தங் களே அவர் புதுவையிலிருக்கும் பொழுதுதான் படித்தார். அதன் பயனுகக் கண்ணன் பாட்டு எழுதினர். புதுவை வாசம் பாரதியாருக்குச் சிறைவாசத்தினுங் கடுமையாகத் தோன்றியது. புதுவையில் அவர் பட்டகஷ்டம் கொஞ்ச கஞ்ச மன்று. அவருக்குப் பணஉதவி செய்வாரில்லை. யாராவது அவர் பெயருக்குப் பணம் அனுப்பி குல் அதுவும் அவருக்குச் சேராது. போலீஸ் தொல்லே சொல்லமுடியாது. அவரை மெது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/60&oldid=816581" இலிருந்து மீள்விக்கப்பட்டது