பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

சர் ஈசாக் நியூட்டன்


தனது ஆராய்ச்சி அறையில் ஒரு பெரிய வட்டமும் ஒரு சிறிய வட்டமும் துளைத்து வைத்திருந்தார் விஞ்ஞானி நியூட்டன். அவரைக் காண வந்த நண்பர் “இந்த இரண்டு வட்டங்களும் எதற்கு” என்று கேட்டார். “நான் ஆராய்ச்சி செய்யும்போது மனிதர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது. ஆனால் நான் வளர்க்கும் பூனைகள் மாத்திரம் வரலாம், அதனால் பெரிய பூனைக்கு பெரிய வட்டமும், சிறிய பூனைக்கு சிறிய வட்டமும் செய்து வைத்திருக்கிறேன்” என்றார். “பெரிய பூனை நுழைகிற பெரிய வட்டத்திலேயே சிறிய பூனையும் நுழையாதா” என்றார் நண்பர். “அடடா, அது எனக்குத் தெரியாமலே போய்விட்டதே” என்றார் அகில உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி நியூட்டன்.

ஆராய்ச்சியில் ஈடுபட்டால் சாப்பிட்டோமா, இல்லையா என்றுகூட அவருக்குத் தெரியாது. ஒரு நாள் அவரைக் காணவந்த நண்பர் ஒருவர் அவருக்காக வைத்திருந்த உணவைச் சாப்பிட்டுவிட்டார். பிறகு, இவர் சாப்பிட வந்து பார்த்தபோது தட்டுகள் எல்லாம் காலியாக இருப்பதைக் கண்டு “அடடா, நான் சாப்பிட்டுவிட்டேன் போலிருக்-