பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

உணவு முறை

பகல் உணவே சிறப்புடைய உணவாக ஏதென்ஸ் நகர மக்கள் கருதினர். அதுவும் பகலில் காலங் கடந்து உண்ணப்படும். தம்மோடு உடனிருந்து உண்ணுதற்குத் தம்மை ஒத்த ஆண்களை விருந்தினராக அழைக்கப்பட்டனர். மாதரீகள் ஆண்களோடு உடனிருந்து உண்ணும் வழக்கம் இவர்கள்பால் இலது. இதுவும் நாம் உணவு முறையைக் கொள்ளும் முறையை ஒத்தது என்னலாம். உணவு கொள்கையில் காலில் மிதியடி அணியார்.

இது நம்மவரது தொன்றுதொட்ட பழக்கம் அன்றோ? உணவுக்கு முன் கை கால் சுத்தம் செய்து தானே நாம் உண்கிறோம். ‘கூழானுலும் குளித்துக் குடி’ என்பது இது பற்றியே. அவர்கள் பாதங்கள் அடிமைகளால் சுத்தம் செய்யப்படும். தலையில் மலர் அணியப்படும். உணவு முக்காலியிலோ நாற்காலியிலோ வைத்துப் பறிமாறப்படும். இந்த முறையும் நம் பண்டைக் காலத்துக் கையாண்ட முறையாகும்.

கிரேக்கர் இறைச்சியை அவ்வளவாக விரும்புவர் அல்லர். ஆனால், தெய்வத்தின் பெயரால் பன்றியோ ஆடோ பலியிடப்பட்டால் அதனை மட்டும் விரும்பி உண்பர். இது யாகத்தில் பலியான இறைச்சியை வடவர் உண்பது போன்ற முறையாகும். கூழ் அல்லது கஞ்சி உணவே அவர்கட்கு விருப்பமான உணவாகும். இறைச்சி உண்ணாதார் என்றதனால் தூய உணவினர் என்பதில்லை. முட்டை, உலர்த்தி, உப்புச் சேர்த்துப் பக்குவப்படுத்தப்பட்ட மீன், பால்