பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

அறிகிறோம். விருந்தினர் ஆடற்கேற்பப் பாடுவர்; விடு கவிகள் புனைவர்; சிற்சில விளையாட்டுகளை ஆடுவர். பிளேட்டோ (Plato) எழுதியுள்ள விருந்தைப்பற்றி நாம் வாசித்தால் மிகுதியாக மது வகைகள் இருந்தனவாகவும். இதனால் எல்லாரும் தம்மை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் அழுந்தியதாகவும், இந்த விருந்தில் சாக்ரடீஸ் (Socrates), அரிஸ்டோபானிஸ் (Aristophanes) அகோதன் (Agothon) ஆகிய மூவர் மட்டும் உறங்கிலர் என்பதும் அறியலாம்.

சாக்ரடிஸ் உறங்காமைக்குக் காரணம் அவர் முனைய இருவரோடு, ‘துன்பியல்’ ‘இன்பியல்’ ஆகிய இவற்றை ஒரு நூலில் முடிந்துக் காட்டுவது ஆசிரியரின் ஒப்புயர்வற்ற அறிவின் திறத்தைப் பொறுத்திருத்தலின் இருவரின் அறிவும் ஒன்றே அன்றி முன்றினும் மற்றென்று விஞ்சியது அன்று’ என்பதைப் பற்றி நீண்ட விவாதம் நடத்தியதேயாகும். அரிஸ்டோபானிஸ், அகோதன் ஆகிய இருவரும் குடிமயக்கத்தில் மிகுதியும் அழுந்தி இருந்ததனால் சாக்ரடிஸ் சொன்னவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டனர். பிறகு இருவரும் உறங்கிவிட்டனர். பிறரு சாக்ரடிஸ் அந்த இடத்தில் இராமல் புறப்பட்டுப் போய்க்கொண்டே இருந்தார். இம்மாதிரியான வாய்ப்புக்கள் அடிக்கடி நிகழ்வதில்லை. கிரேக்கர் மதுவை ஒரு பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கவில்லை. சில நேரங்களில் சிறிது உற்சாகமாக இருக்கவே பயன்படுத்திவந்தனர்.