பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

உலக


5. அவா அறுத்தல், முற்றத் துறத்தல், தன்பொருளையும் பொருள்மேல் பற்றையும் துறத்தல். இதை பரிக்கிரக தியாகம் என்பர்.

“எஞ்ஞான்றும் அவா அப்பிறப்பினும் வித்து”-குறள் 361

கடவுள்தான் இவ்வுலகைப் படைத்து ஆள்கிறார் என்ற கொள்கையை மறுப்பது ஜைனம். உலகம் அணுக்களின் சேர்க்கையால் தோன்றி, உழன்று வாழ்வதாகவும், அணுக்கள் உள்ளவரை உலகம் அழியாது என்பதும் அவர்கள் வாதம்.

ஆறு பொருள்களின் சேர்க்கை உலகம். காலம், இடம் பொருள், ஆன்மா, இயக்கம், இயக்கமின்மை என்பன அவை அவர்கள் கூற்றுப்படி உலகம் இரு பகுதியானது. உணர்வுள்ளன-உணர்வற்றவை.

வர்த்தமானரின் உபதேசம்:

“எல்லா ஜீவன்களும் கர்மம் அல்லது வினையின் பாரத்தோடு பிறக்கின்றன. ஆகவே பலமுறை பிறந்து, இறந்து அந்த வினையின் பயனை அனுபவித்துத் தீர்க்கவேண்டியதிருக்கிறது. சம்சாரம் அல்லது இந்த உலக வாழ்வு துன்பம் நிறைந்தது. கேவல ஞானம் எய்தினவர்க்கே பேரின்பம் சித்திக்கும். நல்லெண்ணம், நற்செயல், நற்சொல் இவையே மேலான நிலையை அளிக்கும். தீய எண்ணம், தீய சொல், தீய செயல் இவை இழி நிலைக்குக் கொண்டுவிடும். தன்னடக்கம் வாழ்வில் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதி அப்போதுதான் அரசனோ, தெய்வமோ, முந்திய வினையோ நம்மைப் பாதிக்க முடியாது. நிர்வாண நிலை எய்தினவர்க்கு மூப்பு, பிணி, சாவு எதுவும் இல்லை. என்னதான் வேண்டினாலும் சடங்குகளும், அர்த்தமற்ற யாக யக்ஞங்களும் செய்தாலும் இன்பத்தில் மூழ்கித் திளைத்தாலும் அந்த நிலையை அடைய முடியாது. அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், பிரமசரியம், அபரிக்கிரகம் இவையே நிர்வாணம் எய்தும் சாதனங்கள், எல்லையற்ற பேரின்பமாகிய நிர்வாண நிலை அடையும் வழியைத்