பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

45

வேலை இகுக்கிறது. நீ வேண்டுமானால் போய் விட்டு வா, என்று மனைவியிடம் கூறுவிட்டான். அதன் பிறகு கணவனை விட்டுத் தான் மட்டும் போக வள்ளி விரும்பவில்லை.

எனவே, “எனக்கு உடம்பு சரியில்லை மன்னித்துக் கொள்ளுங்கள்,” என்று கடிதம் எழுதிவிட்டு பணத்தையும் திருப்பி அனுப்பி விட்டாள்

அதன் பிறகு பரமகுரு இலங்கை வந்துபோகும் போதெல்லாம் வள்ளியம்மையையும், கனக விஜயனையும் பார்த்துப் பேசி குசலம் விசாரிக்காமல் செல்லமாட்டார்.

இத்தனை வருஷங்களுக்குப் பிறகு பரமகுரு தன் குடும்பத்துடன், முதல் முதலாக இலங்கை வரும்போது அவர்களை வரவேற்க வள்ளியம்மை பெரிதும் ஆசைப்பட்டாள். அதே எண்ணத்தில்தான் விஜயனும் இருந்தான்.

ஆனால் கடைசி நேரத்தில் எல்லாமே மாறி விட்டது. அன்று நடக்கவிருக்கும் மலையகப் பொதுக் கூட்டத்தில் கனக விஜயன் பேசினால் தான் எடுபடும். விஜயனது பேச்சைக் கேட்க அங்குள்ள மக்கள் ஆவலாக இருப்பதாக கட்சிக்குத் தகவல் போகவுமே காரியதரிசி விஜயனை அங்கு போகும்படி பணித்து விட்டார்.

செய்வதொன்றும் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்த விஜயனுக்கு வள்ளிதான் ஆறுதல் சொன்