பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

11


ஒரு சிறு பரப்பளவுள்ள மைதானம், விளையாடுவதற் கென்று வேறு எந்தவிதமான பொருட்களும் தேவையில்லை. செலவில்லாத ஆட்டம், அதற்குள்ளே ஆயிரமாயிரம் பரபரப்பும் திகிலூட்டும் அனுபவங்கள். அதனால்தான் கோகோ ஆட்டம் நாடு முழுமையும் நாட்டுப்புற மக்களால் விரும்பி ஆடப்பட்டு வந்தது. வருகிறது.

கோகோ ஆட்டத்தில் ஒரு குழுவிற்கு 9 ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் என்றால், அத்தனை பேரும் உடல் திறமுள்ளவராகவும், தரமுள்ளவராகவும் விளங்கினால்தான், ஆட்டம் சிறப்பாகவும், ரசிக்கும் படியாகவும் இருக்கும். மிக அவசரமாக இயக்குகின்ற காலம் என்று தற்போதைய நாகரிகக் காலத்தை குறிப்பிடுவார்கள். அத்தகைய வாழ்க்கை வேகத்திற்கு ஏற்ப எந்த வேலையையும் மிகக் குறைந்த காலத்திலேயே செய்துவிட வேண்டும் என்று துடிப்பவர்கள் தான் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள். அப்படி நாம் பார்த்தால், குறைந்த காலத்தில் முடிவு பெறுகின்ற ஆட்டமாக, அதேசமயத்தில் அதிகமாக இயங்கி அயர வைக்கின்ற ஆட்டமாக, கோகோ ஒரு சிறப்பான இடத்தையே பெறுகிறது என்பதற்கு எள்ளளவும் ஐயமே இல்லை .

நதி மூலம் ரிஷி மூலம்

இவ்வளவு அருமையான ஆட்டம் எப்பொழுது தோன்றியது என்று ஆராய விரும்பினால் அது வரலாற்றுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. 'ரிஷிமூலம் நதிமூலம் யாருக்குத் தெரியும்' என்பார்களே, அதுபோலவே கோகோ ஆட்டத்தின் மூலமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/13&oldid=1377552" இலிருந்து மீள்விக்கப்பட்டது