பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

37


37 முயற்சியில் ஒரு ஓட்டக்காரரைத் தொட்டுத் தவறிழைத்து விட்டாலும், அந்த குறிப்பிட்ட ஆட்டக்காரர் வெளியேற்றப்படவில்லை என்றே அறிவிக்கப்படுவார்.

குறிப்பு: ஓடி விரட்டுபவர் ‘தவறிழைத்துக் கொண்டே தொடுகின்றதில் வெற்றி பெற்றாலும்’ அது ஓட்டக்காரரைப் பாதிக்காது. விதிமுறைப்படி அவருக்கு அந்தப் பாதுகாப்பு உண்டு.

25. ஏதாவது ஒரு விதியை ஒரு ஓடி விரட்டுபவர் மீறினாலும், உடனே நடுவர் (Umpire) தவறு என்று தனது விசிலில் சிறு ஒலியால் தொடர்ந்தாற்போல் ஊதிக்காட்டி, போய்க் கொண்டிருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் ஓடுமாறு உடனே கூறுவார்.

விசில் ஒலியைக் கேட்டவுடனேயே, ஓடி விரட்டுபவர் உடனே நின்று, (துணை) நடுவர் குறிப்பிட்டுக் காட்டும் திசைப் பக்கம் போக வேண்டும். அதற்குள் அந்த நேரத்தில் யாராவது ஒரு ஓட்டக்காரர் தொடப்பட்டு விட்டாலும், அவர் தொடப்படவில்லை என்றே அறிவிக்கப்படுவார்.

துணை நடுவர் குறித்துக் காட்டுகின்ற திசையையே அந்த ஓடி விரட்டுவோர் பின்பற்றிப் போக வேண்டும். அந்த நேரத்தில் கோ கொடுக்காமல், ஓடும் காரியத்தைத் தான் செய்ய வேண்டும். அதற்குப் பிறகே கோ கொடுக்க வேண்டும்.

IV. போட்டி ஆட்டத்திற்குரிய விதிகள்

1. 12 ஆட்டக்காரர்களைக் கொண்டது ஒரு குழுவாகும். அவர்களில் 9 பேர் போட்டி ஆட்டத்தில் பங்கு பெறுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/39&oldid=1377449" இலிருந்து மீள்விக்கப்பட்டது