பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கோகோ ஆட்டம்


3. ஓடுவோர் (Runners)

விரட்டுகின்ற குழுவினரால் விரட்டப்படுகின்ற குழுவினர் அனைவரும் ‘ஓடுவோர்’ ஆவார்கள்.

ஆடுகள எல்லைக்குள் ஓடுகின்ற வாய்ப்பு பெற்று உள்ளே வந்த ஓட்டக்காரர்கள் அனைவரும் தடுத்தாடும் ஆட்டக்காரர்கள் (Defenders) என்று அழைக்கப் படுகின்றார்கள்.

4. கோ கொடுக்கும் முறை (To Give Kho)

கட்டத்தில் உட்கார்ந்திருக்கும் விரட்டுபவருக்குப் பின்னால் வந்து நிற்கிற ஓடி விரட்டுபவர். அவரைத் தன் கையால் தொடும்பொழுதே சத்தமாகவும் தெளிவாகவும் உரத்தக் குரலில் ‘கோ’ சொல்வதையே சரியாகக் கோ கொடுத்தல் என்கிறார்கள்.

குறிப்பு: உட்கார்ந்திருப்பவரைத் தொடுவதும், கோ என்று குரல் கொடுத்துச் சொல்வதும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.

‘கோ’ சொல்வது தாமதமாகவோ அல்லது ஆளைத் தொடுவது நேரம் கழித்தோ நடைபெற்றால், அது தவறென்று கருதப்படும்.

கோ சொல்லிவிட்டு ஆளைத் தொடாமல் இருப்பதும், ஆளைத் தொட்டுவிட்டு ‘கோ’ சொல்லாமல் இருப்பதும் தவறாகும்.

கோ எனும் வார்த்தையைத் தவிர வேறு வார்த்தையைக் கூறி எழுப்பினாலும், அது தவறாகும்.

உட்கார்ந்து கொண்டிருப்பவர் ‘கோ’ என்றோ அல்லது அதுபோன்ற ஒலியுடைய வேறு சொற்களை சொன்னாலும் அது தவறென்றே கொள்ளப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/28&oldid=1377575" இலிருந்து மீள்விக்கப்பட்டது