பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

17



அன்றும் இன்றும் லோனாவுக்கு சிறப்பு வெற்றி எண்கள் கோகோவில் தரப்படவில்லை.

எளிமையில் இன்பங்காணுகின்ற இந்தியர்களின் மனோபாவம்: ஒரு கட்டுப்பாட்டிற்குள்ளே கட்டுப்பட்டு, தன்னையும் தந்து தரமாக வாழ முயலும் தனித்தன்மை: உழைப்புக்கு முக்கியத்துவம் தந்து உண்மை இன்பம் காணும் பண்பாடு; குறைந்த நேரத்தில் கொண்ட நினைவை குறைவிலாமல் செய்து முடிக்க வேண்டும் என்னும் குன்றெனும் கொள்கை வளம்; வலிமையே மனித வாழ்க்கை என்ற பரம்பரை பெருமையை உணர்த்த முயலும் பாங்கு; இவற்றுடன் தான் கோகோ ஆட்டம் சிறப்பாக மக்களிடையே பரவி வளர்கிறது.

அத்தகைய அருமையான ஆட்டத்தை சிறுவர் சிறுமியர் அதுவும் பள்ளிக்கூட மாணவ மாணவியர்தான் ஆடிட வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். இதை எல்லோரும் ஆடலாம். ஆண்களும் ஆடலாம். அதேபோல் பெண்களும் ஆடலாம். அவர்களுக்கெல்லாம் தேசிய அளவிலே போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.

வலிமையுள்ள சமுதாயத்தைப் படைக்க, கிராமங்கள் தோறும் கோகோ ஆட்டத்தை வளர்த்துவிட்டால் பொழுது போக்காகவும் மகிழலாம். அதே சமயத்தில் அருமையான உடல்வலிமையுடன் திகழ்ந்து ஒப்பற்ற கலை நுணுக்கங்களை வளர்த்தும் திகழலாம்.

இப்போது இந்தியாவெங்கணும் கோகோ ஆட்டம் சிறப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் கோகோ கழகம் அமைக்கப்பட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/19&oldid=1377577" இலிருந்து மீள்விக்கப்பட்டது