பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

73


என்று முன்னேறிச் சென்று பிற நாடுகளுடன் போட்டியிடும் வலிமை பெறும் நிலைக்கு வளர்ந்து செல்லக்கூடும்.

அத்தகைய அரிய சூழ்நிலையை உருவாக்கித் தரும் பொறுப்பு, தேர்வுக் குழுவினருக்கு இருக்கிறது. ஒரு குழுவிற்குத் தாயாக இருந்து வளர்க்க வேண்டிய தேர்வுக் குழுவினர், தடம் மாறித் தரம் மாறிப் போனால், தாயே குழந்தைக்கு விஷம் கொடுத்தால் தடுப்பார் யாரோ என்ற பாட்டைத்தான் பாட வேண்டியிருக்கிறது.

நீதிபதியாக சிம்மாசனத்தில் வீற்றிருக்க வேண்டியவர்கள், குற்றவாளிக் கூண்டிலே ஏன் கூனிக் குறுகிப் போய் நிற்க வேண்டும்?

மேலே கூறிய குறைபாடுகளைத் தேர்வாளர்கள் தவிர்க்க வேண்டும். விளையாட்டின் மகிமையையும் மாபெரும் சக்தியையும் அவர்களுடைய நாடி நரம்புகளில் எல்லாம் ஓடுகின்ற நிலையில் அவர்களது நினைவில் கலந்திருக்கச் செய்ய வேண்டும்.

“நீதியையும் நியாய உணர்வையும் வளர்க்கிறது விளையாட்டு;
சமவாய்ப்பையும் சமதர்மத்தையும் கொடுக்கிறது விளையாட்டு;
உண்மையை, உழைப்பினை உற்சாகமாக வரவேற்கிறது விளையாட்டு;
உயர்ந்த ஆற்றல் உள்ளவர்களை உலகறியச் செய்கிறது விளையாட்டு;
எந்த நிலையிலும் கடமையாளர்களை கௌரவிக்கிறது விளையாட்டு;
வாழ்வுக்கு ஆதாரமாக அமைந்து அளவளாவுகிறது விளையாட்டு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/75&oldid=1377625" இலிருந்து மீள்விக்கப்பட்டது