பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எஸ்.நவராஜ் செல்லையா

83



10. நன்றாக ஒடித் தப்பித்துக் கொள்ளத் தெரியாத மந்த நிலை ஓட்டக்காரரை (Weak player) எளிதாகத் தொட்டு வெளியேற்றக்கூடிய முறையானது, அடுத்தடுத்து தொடர்ந்தாற்போல 'கோ' கொடுத்து அவரை விரட்டிக் களைப்படையச் செய்து தொட்டு வெளியேற்றிவிடலாம். ஆகவே, இந்த சங்கிலித் தொடர் தாக்கு முறையை (Chain Attack) எல்லோருமே எளிதாகப் பின்பற்றி ஆடலாம். இது விரைவான ஆட்டத்தை உண்டாக்கிவிடும்.

11. தப்பி ஓடுகின்ற ஓட்டக்காரர் விரைவாக ஓடுகின்ற பொழுது பின்னாலே விரட்டிக் கொண்டு வருகின்ற 'ஓடி விரட்டுபவர்', அவர் முதுகிலோ அல்லது தோள் புறத்திலோ அல்லது கையிலோ தான் தொட்டு வெளியேற்றலாம் என்பது மட்டுமல்ல.

ஓடுகின்றவர் பின்னங்காலைத் துக்கித் தானே ஒட வேண்டும். அப்படி அவர் காலைத் தூக்கி ஒடுகிற பொழுது, உங்கள் கைக்கு எட்டுகின்ற வகையில் இருந்தால், ஒடும்போதே குனிந்தவாறு அவர் பின்னங்காலைத் தொட்டுவிடலாம்.

விரட்டுபவர் வேகமாக ஓடவும் வேண்டும். முன்புறம் உடலை வளைத்துக் குனியவும் வேண்டும். அந்த சமயத்தில் சமநிலையை இழந்துவிடக் கூடாது. இத்தகைய வாய்ப்பு வந்தால் விட்டுவிடவும் கூடாது.

12. எல்லாவற்றிற்கும் மேலாக, விரட்டித் தொடுவதற்கான விதிமுறைகளை மீறாமல், ஒட்டக்காரர்களை விரட்டித் தொட முயல வேண்டும். விதிகளை அடிக்கடி மீறினால், நடுவரும் விசில் ஊதி உங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/85&oldid=1377631" இலிருந்து மீள்விக்கப்பட்டது