பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

23


குறிக்கப்பட்டிருக்கும் நீண்ட சதுரமே நடுக்கோடு (Centre lane) என்று அழைக்கப்படும்.

5. அந்த நடுக்கோட்டில் 30 சென்டி மீட்டர் நீளமும் 30 சென்டி மீட்டர் அகலமும் கொண்டதாக 8 சிறு சிறு சதுரக் கட்டங்கள் (Squares) அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது நடுக்கோடும் குறுக்குக் கோடும் சந்திக்கும் இடங்களில் எல்லாம் 30 சென்டி மீட்டர் X 30 சென்டி மீட்டர் என்னும் பகுதிகள் ஏற்பட்டு, அதுவே சதுரக் கட்டம் என்ற பெயரினைப் பெற்றிருக்கிறது.

ஒரு சதுரக்கட்டத்தின் மையத்திற்கும் மறு சதுரக் கட்டத்தின் மையத்திற்கும் உள்ள இடைப்பட்ட தூரம் 270 சென்டி மீட்டராகும். கம்பத்திற்கும் முதல் கட்டத்திற்கும் இடையேயுள்ளதுரம் 2.60 மீட்டராகும்.

6. ஆடுகளத்தின் நடுவே போடப்பட்டுள்ள நடுக்கோட்டினை 8 குறுக்குக்கோடுகள் கடந்து செல்கின்றன. அந்த ஒவ்வொரு குறுக்குக் கோடும் 15 மீட்டர் நீளமும் 30 சென்டி மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும்.

நடுக்கோட்டால் பிரிக்கப்படுகின்ற குறுக்குக் கோட்டின் சரிபாதி (அதாவது நடுக்கோட்டிலிருந்து பக்கக் கோடு) (Side line வரை) 7.35 மீட்டராகும்.

7. குறுக்குக் கோடுகளுக்கு இணையாக, 2.25 மீட்டர் தூரத்தில் கம்பத்தின் மையப் புள்ளியின் வழியாக ஒரு கோடு செல்கிறது. அதற்கு, கம்பக்கோடு (The line of The Post) என்று பெயர்.

8. எல்லைகள் (The limits): நடுக்கோட்டிற்கு இணையாக அதில் இருந்து இருபக்கங்களிலும் 7.35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/25&oldid=1377585" இலிருந்து மீள்விக்கப்பட்டது