பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

6. விரட்டி ஆடுவோருக்கு வேண்டிய

திறன்கள் (Chasers)

வ்வொரு ஆட்டத்திலும் தாக்கி ஆடுதல் (Attack) என்றும், தடுத்தாடுதல் (Defense) என்ற இரு முறைகள் உண்டு. கோகோ ஆட்டத்திலும் இதுபோன்ற முறை உண்டு என்றாலும், ஓடுபவர்களை விரட்டித் தொட முயலும் போது தாக்கி ஆடுதல் என்றும், தொட வரும்போது, தொடப்படாமல் தப்பி ஓடுகிற நிலையை தடுத்தாடுதல் என்றும் நாம் கொள்ளலாம்.

தாக்கி ஆடுகின்ற முறையையே நாம் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு தாக்கி ஆடுகின்ற முறையை நாம் மூன்று வகையாகப் பிரித்துக் கொண்டு, எவ்வாறு விளையாட வேண்டும் என்று கவனிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/77&oldid=1377450" இலிருந்து மீள்விக்கப்பட்டது