பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

97


உட்கார்ந்திருப்பவர்களுக்கு இடையே நுழைந்து ஓடும்போது, உட்கார்ந்திருப்பவர்களின் முன் பக்கமாகவே (Face) தான் ஒட வேண்டும். அவர்கள் முதுகுப்புறம் இருக்கும் பக்கமாக (Back) நுழைந்து ஒடக்கூடாது.

அவ்வாறு நுழைவதானது, விரட்டுபவருக்கு உடனே 'கோ' கொடுத்து எழுப்ப முடியாமற் போய்விடும். இவ்வாறு தப்பி ஓடும் முறையை, ஓட்டக்காரர்கள் பயிற்சிக் காலத்தில் சிறப்பாகப் பழகிக்கொள்ள வேண்டும்.

7. விரட்டி வருபவர் வேகமாக ஓடிவரும் நிலையில் எந்த ஓட்டக்காரரும் நேராகவே ஓடித் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்து ஓடுவது தவறான ஆட்ட முறையாகும். விரட்டுபவர்களை அடிக்கடி கோ கொடுத்து ஆடச் செய்கின்ற நிலைக்கு ஆளாக்குவது போல, சங்கிலி ஓட்ட முறையினை ஒட்டக்காரர்கள் பின்பற்றி ஆட வேண்டும்.

8. சங்கிலி ஓட்ட முறையினைப் பின்பற்றி, உட்கார்ந்திருப்பவர்களுக்கிடையே ஓடி ஏமாற்றி ஆடும் ஆட்டக்காரர்கள், உட்கார்ந்திருப்பவர்களுக்கிடையே தான் ஏமாற்றி ஆடிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர மறந்தும் கம்பத்தின் பக்கமாகப் போய் நிற்கக் கூடாது.

கம்பத்தின் பக்கம் ஓட்டக்காரர்கள் வந்துவிட்டார்கள் என்றால், விரட்டித் தொடுபவர்களுக்குத் தொட்டு வெளியேற்றும் வேலை மிக எளிதாகக் கூட அமைந்துவிடும். விரட்டுபவர்களின் நோக்கமே, கம்பத்துக்கருகில் உள்ள இடங்களுக்கு, ஓட்டக்காரர்களை ஓடச் செய்து ஒதுக்கிக் கொண்டு போவதுதான் நோக்கமாக இருக்கிறது என்பதையும் ஓட்டக்காரர்கள் மறந்துவிடக் கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/99&oldid=1377675" இலிருந்து மீள்விக்கப்பட்டது