பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

41


குறைந்த நேரத்திற்குள் ஒருவரைத் தொட்டு வெளியேற்றுகிற குழுவே போட்டியில் வென்றதாகும்.

இந்த முறையே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வரை பின்பற்றப்பட வேண்டும்.

13. எல்லா ஓட்டக்காரர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடப்பட்டு வெளியேற்றப்பட்டால், முன் வந்த வரிசைப்படியே, அதாவது முதல் மூவர், இரண்டாம் மூவர், மூன்றாம் மூவர் என்பதாகத்தான் ஓட்டக்காரர்கள் ஆடுகளத்திற்குள் வந்து ஆட வேண்டும்.

இவ்வாறு, அந்த ஆடும் வாய்ப்பு (Turn) முடியும் வரை, ஆட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

14. ஆடும் வாய்ப்பு (Turn) தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, இடையிலே ஓட்டக்காரர்களின் வரிசை முறையை (order) மாற்றவே கூடாது.

வெற்றி பெற வழிகாட்டும் விதி முறைகள்

1. போட்டி ஆட்டத்தில் மேற்கொள்கின்ற முடிவாட்ட முறையில் 7 (Knock out System) ஆட்ட நேர இறுதியில் அதிகமான வெற்றி எண்களைப் பெற்றிருக்கின்ற குழுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

2. இரண்டு குழுக்களும் இரண்டு முறை ஆட்டங்கள் (Innings) முடிந்த பிறகு சமமான வெற்றி எண்களைப் பெற்றிருந்தால், மேலும் ஒரு தடவை ஆடுகின்ற முறை ஆட்ட வாய்ப்பு (Inning) கொடுக்கப்பட வேண்டும்.

முறை ஆட்ட வாய்ப்பு என்றால், ஒரு குழுவானது ஒருமுறை விரட்டவும், ஒரு முறை ஓடவும் பெறுகின்ற வாய்ப்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/43&oldid=1377467" இலிருந்து மீள்விக்கப்பட்டது