பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

கோகோ ஆட்டம்


6. சாதாரண தண்டால் போடுதல் (10 தடவை).

7. பக்கவாட்டிலே வேகமாக ஓடுதல் (Sideward Running).

8. நீண்ட தூரம் ஓடிப் பழகுதல்.

இவ்வாறு கால், கை, இடுப்பு பகுதிகளுக்கு ஏற்ற பயிற்சிகளைச் செய்தல். போட்டி ஆட்டத்தின் போது, நேராக வந்து ஆடுகளத்திற்குள் இறங்கி ஆடிடவே பலர் முயற்சி செய்கிறார்கள். அது தவறான முறையாகும். உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகளை குறைந்தது அரைமணி நேரமாவது செய்து, தங்கள் விருப்பம் போல் உறுப்புக்கள் இயங்குதற்கேற்றவாறு முயற்சி செய்ய வேண்டும்.

பொதுவான பதப்படுத்தும் பயிற்சிகளைச் செய்த பிறகு, கோகோ ஆட்டத்திற்கென்று உள்ள சிறப்பான பயிற்சிகளையும் தொடர்ந்து செய்திட வேண்டும்.

தனது பாங்கருக்குக் கோ கொடுப்பது போன்ற பாவனையில் ஓடி நின்று குனிந்து தருதல் ; கம்பத்தைப் பிடித்துத் தாவி எதிரியைத் தொடுவதுபோல செய்து பார்த்தல் (pole Dive); வேகமாக ஓடிக் கம்பத்தைப் பிடித்து மறுபுறம் திரும்பி வருதல் (Pole Turning); குறுக்குக் கட்டங்களுக்கிடையே பதுங்கிப் பதுங்கி ஓடுவதுபோல ஓடிப் பார்த்தல் (Moving in Cross Lane); உட்கார்ந்திருப்பவர்களுக்கு இடையே தொடப்படாமல் ஓடுவது போல, அதே பாவனையில் பக்கவாட்டில், சங்கிலி ஓட்ட முறையில் ஓடிப்பார்த்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/108&oldid=1377583" இலிருந்து மீள்விக்கப்பட்டது