பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கோகோ ஆட்டம்


1. ஒருமுறை ஆட்டத்தில், குறிப்பிட்ட நேரத்திற்கு முன் எல்லா ஓட்டக்காரர்களையும் தொட்டு வெளியேற்றி விட்டால், விரட்டும் குழுவினைக் குறிக்கும் குறிப்பேட்டில் (Score sheet) லோனா என்று குறிக்கப்படும். லோனாவுக்கென்று தனியாக வெற்றி எண்கள் தரப்படவில்லை, கிடையாது.

புதிய விதி: மூன்றாவது முறை ஆட்டத்தையும் தொடர்ந்து ஆடிய பிறகும் வெற்றி எண்கள் சம நிலையில் இருந்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாத நேரத்தில் அடுத்த ஒரு ‘முறை ஆட்டம்’ (Additional inning) தொடங்க வேண்டும்.

அதனை கீழே குறிப்பிடப்பட்டிருப்பது போல் நடத்திட வேண்டும்.

விரட்டுகின்ற வாய்ப்பு பெற்ற குழுவினர் ஒரு ஓட்டக்காரரைத் தொட்டு வெளியேற்றிய உடனேயே ஆடி வரும் அந்த முறை ஆட்டத்தை முடித்துவிட வேண்டும். எத்தனையாவது நிமிடத்தில் எதிராட்டக்காரரை அவர்கள் தொட்டார்கள் என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

முன்னர் ஓடிய குழுவினர், இப்பொழுது விரட்டும் வாய்ப்பைப் பெறுகின்றனர். முன்னர் குறித்துள்ள நேரத்திற்குள் ஒருவரைத் தொட்டுவிட்டால், இவர்களே வென்றவராவார்கள்.

குறித்திருக்கும் நேரத்திற்குள் ஒரு ஓட்டக்காரரைத் தொடாவிட்டால் அல்லது ஒருவரைத் தொட முடியாவிட்டால், அவர்கள் தோற்றவராவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/42&oldid=1377464" இலிருந்து மீள்விக்கப்பட்டது