பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

கோகோ ஆட்டம்




கம்பத்தைத் தொட்டாலுங்கூட, கம்பக் கோடு முழுவதையும் கடந்த பிறகுதான் திரும்பி வர வேண்டும். கம்பக்கோட்டைக் கடப்பது என்பது, முழுவதும் கடந்துபோய் திரும்புவது என்பது ஒன்று. ஒருகாலை கோட்டைக் கடந்து வைத்துவிட்டு, மறு காலை தூக்கிவிட்டாலும் அது கடந்ததுபோல்தான்.

இதை நினைவில் வைத்துக் கொண்டு, கம்பத்தைத் தொட்டுவிட்டு வர விரும்பும்போது, கோட்டையும் கடந்து விட்டு வர வேண்டும் என்று ஆடினால்தான், தவறுக்குள்ளாகாமல் ஆடலாம், இல்லையேல் அருகில் வந்து தொடும் வாய்ப்பை இழந்துபோக நேரிடும்.

10. ஒடி ஒட்டக்காரரை விரட்டுகின்ற ஒரு ஆட்டக்காரர், நடுவரின் விசில் ஒலி கேட்டதுமே, தன்னுடைய விரட்டும் நோக்கத்தை சிறிது நேரம் நிறுத்திவைத்து, உடனே நடுவரின் சைகைதனை கவனிக்க வேண்டும்.

தன்னுடைய தவறினைக் கண்டுபிடித்த பிறகுதான் அவர் விசில் ஊதினார் என்றிருந்தால், அதைத் தவிர்த்திட, அவர் என்ன சைகை காட்டுகின்றார் என்பதையும் தெரிந்து கொண்டு, உடனே தவறுக்குப் பரிகாரமாக அவர் காட்டும் திசை நோக்கி ஒட வேண்டும்.

'நடுவர் எதற்காகவோ விசில் ஊதுகின்றார். எனக்கென்ன என்ற மனப்பான்மையில் ஒடிச் கொண்டிருந்தால், அது பயன் தராது. அப்படி ஒடி யாரையாவது தொட்டுவிட்டால் கூட, அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொட்டது ஏற்றுகொள்ளப்படாத பொழுது, தொட முயற்சி செய்வதால் என்ன பயன் வந்துவிடும்? மீண்டும் வேறு திசைப்பக்கம்தானே ஒடியாக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/118&oldid=1377571" இலிருந்து மீள்விக்கப்பட்டது