பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

8. ஆட்டத்தின் நுணுக்கமும்

அதற்கான பயிற்சிகளும்

கோகோ ஆட்டத்தில் பங்கு பெறுகின்ற ஆட்டக்காரர்களுக்கு இன்றியமையாத தேவைகள் வலிமையான உடல்; வற்றாத நெஞ்சுரம் (Stamina); விரைவோட்டம் (Speed); உடனே செயல்படும் திறனூக்கம் (Quick Reaction); இத்தனையும் ஏன் என்றால், குறுகிய எல்லைக்குள்ளே எதிர் ஆட்டக்காரரை விரட்டித் தொட அல்லது விரட்டப்படும் பொழுது தப்பித்துக் கொள்ளத்தான்.

'ஏதோ இப்படியும் அப்படியும் ஓடி சமாளித்து விடலாம்' என்ற எண்ணத்தில் நம்பிக்கை வைத்துக் கொண்டு ஆடுவதற்குச் சென்றுவிட்டால், அரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/103&oldid=1377468" இலிருந்து மீள்விக்கப்பட்டது