பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஐ் செல்லையா

1௦


கொண்டு வரும் பயிற்சிகள்; ஆட்ட நேரத்திற்கு அரைமணி அல்லது முக்கால் மணி நேரம் செய்து கொள்கின்ற பதப் பயிற்சிகள்; போட்டி முடிந்த பிறகு, தொடர்ந்தாற் போல் வேறு பல விருப்பமான விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் தரநிலையை, திறநிலையை மிகுதிப்படுத்திக் கொண்டு வருதல் என மூன்று நிலைகளில் ஒரு ஆட்டக்காரர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால்தான் திறன் நுணுக்கம் வளர்பிறையாகும். இல்லையேல் அடிக் கரும்பைத்தின்னத் தொடங்குபவர் நிலையையே அடைவார்.

உடற்பயிற்சிகளைச் செய்யும் பொழுது, முன் கூட்டியே திட்டமிட்டு, கைகள், அடிவயிறு, இடுப்புப் பகுதி, கால்கள் இவற்றிற்கு அதிக சக்தியைத் தருகின்ற பயிற்சிகளாகத் தேர்ந்தெடுத்து, அதனை 10 லிருந்து 20 நிமிடங்கள் வரை செய்து கொண்டு வரலாம்.

1. மல்லாந்து படுத்து எழுந்து முன் பாதங்களைத் தொடுதல். (20 முறை)

2. கைகளைக் கோர்த்தபடி படுத்திருந்து, கால்களைத் தூக்காது முன்போல் எழுந்து வலது முழங்கையால் இடது முழங்காலைத் தொட்டுவிட்டு முன்போல் படுத்துக் கொள்ளுதல். அதேபோல் மீண்டும் எழுந்து இடது கையால் வலது முழங்காலைத் தொடுதல் (20 தடவை).

3. கயிறு தாண்டிக் குதித்ததல்(Rope Skipping) 5 நிமிடங்கள். -

4. பந்தை தலைக்குமேல் கொண்டு சென்று வீசுதல் (30 முறை).

5. கம்பியில் தொங்கி உடலை மேலே தூக்குதல் (Pull Ups) 2 முறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/107&oldid=1377599" இலிருந்து மீள்விக்கப்பட்டது