இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ்.நவராஜ் செல்லையா
107
இவ்வாறு ஆட்ட நுணுக்கத்திற்கான திறன்களையும் பதப்படுத்தும் பயிற்சியின்போது செய்து பழகி, உடலை போட்டியின்போது சுலபமாக வலியின்றிப் பயன்படுத்திக்கொள்ள ஆட்டக்காரர்கள் முயல வேண்டும். பதப்படுத்தும் பயிற்சிக்கும் போட்டிக்கும் அதிக நேர இடைவெளி இல்லாதவாறு பயிற்சிகளைத் தொடங்கி செய்திடவும் வேண்டும்.