பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சாந்த : அஞ்சு வருஷத்துக்கு முன்னே, மெரின பீச்சிலே பார்த்து பேசினேம்...அந்த சாந்தமூர்த்திதான். ரவி : ஜயா...நீங்களா? செளக்கியமா இருக்கீங்களா? இப்ப நீங்க எங்கேயிருந்து பேசுறீங்க...இவ்வளவு நாள் எங்கே இருந்தீங்க... சாந்த எல்லாத்தையும் நேரிலே பேசிக்கலாம்; உடனே உங்களைப் பார்க்கணும். வீட்டுக்கு வந்தா பார்க்க முடியுமா? ரவி : உங்களுக்காக எப்பவும் காத்துக்கிட்டிருக்கேன். நீங்க எப்பவும் வரலாம். சாந்த இப்பவே வர்றேனே-வரட்டுமா? ரவி : ஒ...தாராளமா! இந்த வீட்டுக் கதவு உங்களுக்காக எப்பவும் திறந்தே இருக்கும்! சாந்த : தேங்க்யூ...... ரவி : தேங்க்யூ சார். (டெலிபோன வைக்கிருன்) கலா யார் ரவி போன் பண்ணின? ரவி : அவரா...எனக்கு என் வாழ்க்கையிலே ஒரே முறை தான் அறிமுகம் ஆளுரு...அந்த அறிமுகத்தினலே தான் நான் இந்த உலகத்துக்கே அறிமுகம் ஆகியிருக்கேன்! க்லா : கொஞ்சம் புரியும்படியாத்தான் சொல்லுங் களேன்... ரவி : சொல்றேன் கலா...சொன்னத்தான் உனக்குப் புரியும்...எனக்கும் கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கும், அஞ்சு வருஷத்துக்கு முன்னே தான் பரம ஏழை... அன்ருடம் பசியும் பட்டினியோடு ஒரு குடிசையிலே ஒரு நண்பரோடு ஒன்டுக் குடித்தனம்...ஆன எனக்கு இருந்த ஒவியத் திறமை...அதை யாரும் பயன்படுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/54&oldid=777117" இலிருந்து மீள்விக்கப்பட்டது