பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

91



தொடல் நிகழ்ந்திட முடியும். Diving என்றால் தாவி விழல் என்பார்கள். இங்கே தாவித்தொடல் என்று தமிழாக்கி இருக்கிறோம்.

தாவி விழலை ஜாக்ரதையாகச் செய்ய வேண்டும் என்று எச்சரித்துவிட்டு, அடுத்தத் திறனுக்குச் செல்கிறோம்.

4. குனிந்து தொடல் (Tapping)

ஓட்டக்காரர் ஒருவர் விரட்டுபவரிடமிருந்து தப்பித்துக் கொள்ள ஆடுகளத்தின் ஒரு பகுதியிலிருந்து ஒரு கோட்டைக் கடந்து மறுபகுதிக்கு ஓட முயலும்போது விரட்டுபவர் பின்னாலேயே வேகமாக விரட்டி வந்து உடல் பகுதியைத் தொட இயலாமற்போகும் போது சற்று முன்னாலே குனிந்து (Lean forward) ஓட்டக்காரரின் காலை அல்லது கால்களைத் தொடுவதையே குனிந்து தொடல் என்று கூறுகிறோம்.

நடுக்கோட்டைக் கடக்கும்போது, ஆடுகளப் பகுதியில் ஓடுகின்ற வேகம் ஓட்டக்காரருக்கு இருக்காதாகையால், அவர் சற்று குறைந்த வேகத்தில் நடுக்கோட்டுப் பகுதியைக் கடக்கும்போது விரட்டுபவர் சற்று வேகமாக செல்லாது குனிந்து அவரது காலைத் தொட்டுவிட வேண்டும்.

இது கொஞ்சம் கஷ்டம்போல் தோன்றினாலும், எளிதுதான். வேகமாக ஓடிவருபவர், உடனே கீழே முன்புறமாகக் குனியும்போது உடல் சமநிலை இல்லாமல் போய்விடும். உடல் சமநிலை இல்லாவிட்டால் நடுக்கோட்டை மிதித்து விட நேரிடும். அல்லது வேறு ஏதேனும் தவறிழைத்துவிடவும் கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/93&oldid=1377653" இலிருந்து மீள்விக்கப்பட்டது