பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

7. தப்பி ஓடும் தந்திர முறைகள்

(Running Skills)

திட்டமிட்டு விரட்டுகின்ற குழுவினருக்கிடையே, சுற்றிவளைக்கப்பட்டதோர் ஆடுகள எல்லைக்குள்ளே தொடப்படாமல் தப்பித்து ஓடுகின்ற ஆட்ட முறையானது மிகவும் சாமர்த்தியமான கலைதான்.

விரட்டிக் கொண்டு வருகின்ற ஆட்டக்காரருக்கு இப்படித்தான் ஓட வேண்டும், இப்படித்தான் திரும்ப வேண்டும், கோடுகளை மிதிக்கக் கூடாது. கடக்கக் கூடாது என்பன போன்ற விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக அமைந்திருக்கின்றன. ஆனால் தப்பி ஓடுவோருக்கு ஒரே ஒரு கட்டுப்படுத்தும் விதிமுறைதான் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/95&oldid=1377529" இலிருந்து மீள்விக்கப்பட்டது