பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஏக இதோ வெளியிலே இருக்குருரு...நமக்கு வேண்டிய பையன். ரொம்ப நல்ல பையன். வீரக வேண்டியவங்கன்னதாம்பா, இப்ப எந்த வேலையும் நடக்குது. ஏகா நம்ம பையன் இருக்கானே, நல்லா படிச்சவன் படிப்பைத் தவிர வேறு எந்த விஷயமும் அவனுக்குத் தெரியாது. விரா : இந்த காலத்துலேயும் இப்படி ஒரு பையன? ஏகா : பையன் நல்லா டியூஷன் கத்துத் தருவான். வீரா : என் பையன் பொறுமையா இருந்து படிக்கனுமே! ஏகா கோபிச்சுக்காதேப்பா-உனக்கு ஒரே பையன்னு: செல்லம் குடுத்துட்டே என்ன பண்றது? வீரா எதுக்கும் ஒரு முடிவு வருமே-பார்ப்போம்! நீ. போய் வாத்தியாரை அழைச்சுகிட்டு வா! ஏகா : இதோ வந்துடறேன். (விசில் சத்தம் கேட்கிறது) முத்து : அப்பா! அப்பா! வீரா : வாடா முத்து... முத்து : அப்பா-என் பேர் முத்துவும் இல்லே-முத்து சாமியும் இல்லே. வீரா ஏண்டா...பேரு வச்சவன் கிட்டேயே இல்லேங்குற. முத்து வெட்டிட்டேன்... வீரா : எதை டா... முத்து என் பேரைத்தான்-முத்துசாமியை முசாமின்னு, மாத்திட்டேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/87&oldid=777153" இலிருந்து மீள்விக்கப்பட்டது