பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

445

கோகோ ஆட்டம்


அவ்வாறு எழுப்பப்படுபவர்கள் தனது சமநிலை இழந்து, தட்டுத் தடுமாறி கீழே விழுந்து புரண்டு அல்லது விழப்போய் சமாளித்து எழுந்து ஓட முயல்வதும் உண்டு. இவ்வாறு செய்வது தங்கள் குழுவைத்தான் பாதிக்கும் என்று புரியாமலே பலர் செய்கின்றார்கள்.

இன்னும் சிலர், படாரென்று முதுகில் அறைந்து எழுப்புவார்கள். வேறு சிலர், காலால் உதைத்து எழுப்புவார்கள். இவற்றையெல்லாம் தவிர்த்து, கோ கொடுப்பதும் ஆளைத் தொடுவதும் ஒன்றாக இருப்பதுபோல், மிக சாதுர்யமாகத் தொட வேண்டும். வலிந்து தள்ளக் கூடாது.

5. சதுரக் கட்டத்தில் உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும், தனக்கு விரட்டும் வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற தயார் நிலையிலே தான் அமர்ந்திருக்க வேண்டும். அத்தகய நினைவுடன் உட்கார்ந்திருப்பவர்கள், சற்று பதட்டத்துடனும் படபடப்புடனும் அமர்ந்திருப்பது இயற்கைதான்.

அந்த சமயத்தில் தனக்கு முன்னால் ஓட்டக்காரர் ஒருவர் கைக்கெட்டும் தூரத்தில் நிற்கும் பொழுது ஓடி வருபவர் தனக்குத்தான் கோ கொடுப்பார் என்பதும் இயற்கைதான். அதனால், தன்னருகில் வரும்போதே, உட்கார்ந்திருப்பவர் எழுந்து ஓடி விரட்டிட முயல்வதும் அதிகமாக அதாவது சாதாரணமாக நடைபெறுகின்ற நிகழ்ச்சிதான்.

ஆனால், பதட்டத்தை உண்டாக்குகின்ற அந்த சமயத்தில்தான் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். எக்காாணத்தை மன்னிட்டும் (தனக்கு) கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/114&oldid=1377659" இலிருந்து மீள்விக்கப்பட்டது