பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

103



போட்டிகளுக்குப் போதுமானது' என்று நொண்டி சமாதானத்துடன் ராஜநடை போடுபவர்களும் இருக்கிறார்கள். நெடுந்துாரம் ஒடிப் பழகும் ஆட்டக் காரர்கள் ஒரு குறிப்பினை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நெடுந்துார ஒட்டம் என்பது வேறு. அதற்குரிய ஒடும் முறையும் வேறு. ஒடத் தொடங்கிவிட்டால் நிற்காமல், சீராக, நிதானமாக ஒடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது நெடுந்துார ஒட்டத்திற்குரிய இயல்பாகும். கோ கோ ஒட்டம் அப்படிப்பட்டது அல்லவே!

வேகமான ஒட்டம் திடீர் பிரேக் போட்டதுபோல உடனே நின்றுவிடுவது, பிறகு முன்னர் ஒடிய வேகத்தைப் போல புறப்படுவது, ஒடிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று கட்டத்துக்குள் உட்காருவது, பிறகு அதே வேகத்தில் எழுந்து ஒடுவது, ஒடிக் கொண்டேயிருக்கும் போது திரும்புவது, திசை மாற்றுவது, குனிந்தவாறு ஒடுவது, திடீரென்றுத் திசை மாறும்போது உடல் எடையை ஒரு காலிலிருந்து இன்னொரு காலுக்கு மாற்றியவாறு ஒடுவது, நிற்றல், உட்காருதல் போன்ற செய்கைகள் வேறுவிதமான முறைகளாக இருக்க வில்லையா!

ஆகவே, கோகோ ஆட்டத்திற்குரிய ஒட்ட முறைகளுக்காகத்தான் பயிற்சிகள் அமைய வேண்டுமே தவிர, நெடுந்தூர ஓட்டத்தினால் நிகழ்ந்திடும் நெஞ்சுரம் போதியபயனை அளிப்பதில்லை. சீரான ஒட்டத்திற்கும், சுறுசுறுப்பாக ஒடி இயங்குதற்கும் அதிக வேற்றுமைகள் உண்டு. அதற்கு, கோகோ ஆட்டக்காரருக்கென்று உள்ள சில சிறப்பான குணாதிசயங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/105&oldid=1377526" இலிருந்து மீள்விக்கப்பட்டது