பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 3

தெய்வத்துள் வைக்கப் படும்' - என்னும் வள்ளுவர் வாய்மொழியும் இவ்வடிப்படையிலேயே எழுந்தது.

'முருகன்' என்னும் மேம்பட்ட செம்மல் ஒரு பெரும் மக்கள் தலைவனாக வாழ்ந்தான்; அகவாழ்வில் நிறைந்து விளங்கினான்; புற வாழ்வில் பொலிந்தான்; தலைமைத் தன்மைகளை எல்லாம் இயல்பில் பெற்றிருந்தான். எனவே, தலைவன் என்பதற்கு உரிய கிழவன்' என்னும் சொல்லால் குறிக்கப்பட்டான். (கிழமை-உரிமை; கிழவன் - உரிமை யுடையவன்).

'கிழவன், கிழான்' என்னும் சொற்கள் குடித்தலைவற்கும், ஊர்த் தலைவற்கும் வழங்கப்பட்டன. சேக்கிழார், மூலங் கிழார், கோவூர் கிழார் என்பன அவற்றைக் காட்டுகின்றன.

நாட்டுத் தலைவனான மன்னனுக்கும் கிழவன்' என்னும் தலைமைத் தன்மைச் சொல் வழங்கப்பட்டது,

மழைக்கணம் சேக்கும் மா மலைக் கிழவன்' -என அண்டிரனும், சாரல் அருவிப் பயமலைக் கிழவன்' -என ஒரியும், 'ஒளிநிலங் கருவிய மலை கிழவோன்' -என இளந் திரையனும் குறிக்கப்பட்டனர்.

இவரெல்லாரும் அவரவ்ர்தம் வீரத்தால் இவ்வாறு குறிக்கப் பட்டனர். அஃதாவது, புறத்திணை வளத்தால் கிழான்’ எனப்பட்டமைக்குச் சான்றுகள். இதே போன்று அகத்திணை வளம்பெற்ற காதல் தலைவனும் 'கிழவன்' எனப்பட்டான்.

7. குறள் : 59

8. புறம் : 1.31 - 1

1 i سس 2 تا 1 : , و ۰ g

40. பெரும்பாண் : 500