பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வளையல்

‘போரின் இடமும் வட்டாடு இடமும்

ஆடல் இடமும் அவையும் அரங்கம்’’’ என்கின்றது.

நிகண்டுகள் வழங்கும் இக்கருத்துகளுக்கு ஏற்ப இலக்கியங் களும் பேசுகின்றன.

வடநாட்டுப் பயணத்தினின்றும் வென்று மீண்ட சேரன் செங்குட்டுவன் தன் சேரமாதேவியுடன் கொலு வீற்றிருந்ததை

'அணிமணி அரங்கம் -

வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஏறி" என்கின்றது. சிலப்பதிகாரம். இதனில் ஆட்சிக் களம் அரங்கமாகக் கூறப்படுகின்றது. இவ்வடியில் ஏறி என்னும் சொல்லும் உயர மான மேடை என்பதைச் சொல்லி நிற்கின்றது. இவ்வரச மேடை பொன் தகடுகளால் ஒப்பனை செய்யப்பட்டுப் பொன் புனை அரங்கம்' எனப்பெற்றது.

'பாடுவார் பாணிச் சீரும்

ஆடுவார் அரங்கத் தாளமும்” என்னும்

பரிபாடலிலும் 'அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள்' என்னும் கலித்தொகையிலும், நாட்டியக் களத்தை அரங்கமாகக் காண் கின்றோம். சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை என்னும் காதைப் பெயரும்,

'ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிர்' என்னும் மணிமேகலை அடியும் நாட்டியக் களத்தை அரங்கமாகக் குறிக் கின்றது.

புது நூல் ஒன்றைப் படைக்கும் புலவன், அவை மேடையில் அமர்ந்து நூலைப் படித்து விளக்கங் கூறுவான். சான்றோர் அதனை ஏற்றுக்கொள்வர். அஃது 'அரங்கேற்றம்'

எனப் பெற்றது. இது புல்மை அரங்கம்.

3. சேந். திவா இடம் : 18.9

சிலம்பு - 23 : 65,65 பசி - 8 : 1.09

கலி - 79 : :

'7 மணி 1 - 7 : 44