பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி மாறின் வழி மாறும்

முருகு பொருள் மணக்கும் தமிழ்ச் சொல்.

'முருகு அமர் பூ' -என்னும் பட்டினப்பாவை அடியில்

முருகின் மணம்' என்னும் பொருள் கமழ்கின்றது.

முருகு - ஓர் அழகுச் சொல்: "அழகும் முருகே' - எனப்

பிங்கல நிகண்டு முருகின் அழகுப் பொருளைக் காண வைக்கின்றது.

முருகு - ஒரு கட்டிளமைச்சொல்: 'முருகு இளை இளமை'

டஎனச் சூடாமணி நிகண்டு இளமைப் பொருளைச் சுட்டிக் காட்டுகின்றது.

முருகு - ஒரு புதுமைச் சொல்: "படையோர்க்கு முருகு அயர' என்கின்றது மதுரைக் காஞ்சி. இதற்கு வீரர்க்கு வேள்வி செய்யும்படி” என்று நச்சினார்க் கினியர் உரை வகுத்தார். இங்குக் குறிக்கப்படும் வேள்வி விருந்தாகிய வேள்வி. எனவே, வேள்வி விருந்தாகின்றது. விருந்து என்னும் சொல்லின் இயற்பொருள் புதுமை. இப்பொருளை நிகண்டுகள் யாவும் குறிக்கின்றன. விருந்து புனல்' எனப் பரிபாடலும் விருந்தின் பாணி என மலைபடு கடாமும் புது வெள்ள நீர், புதுப்பாட்டு' எனப்

புதுமைப் பொருளை வழிமொழிகின்றன.

மதுரை : 38

1. பட்டின : 37 2. பிங் : 3977 3. சூடாநி : 8 - 27 - 3 4. பரி : 6 - 40;

5.