பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பட்டு பட்டு அனுபவிக்கறேன். எவ்வளவு பணம் வந்தாலும்அவளுக்குநிம்மதி இல்லே...என்ன பண்றது.? அருண : இதுக்கு ஒரு வழி பண்ணியாகனும்! எழுந்திரு' மணல்ல படுத்திருந்தது போதும். மாத என் வாழ்க்கைதான் படுத்து போச்சேப்பா! அருண எழுந்திரு' Dణాడి தட்டி விழுடுற மாதிரி, மனசுல உள்ள கவலைகளை எல்லாம் தட்டி விடு. நான் 'வழி சொல்றேன். மாத் : என்ன வழிப்பா!... அருண ! உன் wifeக்கு கடுதாசி போட்டு, வரவழைச்சுடு, மாத இந்த முப்பது நாளா முள்ளு மேல இருந்த மாதிரி இருந்தேன். இப்ப அவளை வரச் சொல்வி... அருண : எதுக்கும் ஒரு முடிவு வேண்டாமா...? லெட்டரை எழுதி போடப்பா. அப்புறம் பேசிக்கலாம்! மாதவன் : என்னப்பா! தெரிஞ்சிருந்தும் தேன் கூட்டில கல்லெடுத்து போடுறியே! வெய்யில் காலத்துல காற்ருேட்டமில்லாத அற்ைக்குள்ளே படுத்துகிட்டு கொசு கடியில் அவஸ்தை படுறமாதிரி, நான் அவஸ்தை பட்டுகிட்டே இருக்கேன்! அருணகிரி : உனக்கு தேவை பேன், மெத்தை, பிரஷ்ஷர் குக்கர், இத்யாதி இத்யாதி... மாதவன்: ஆமா, ஆமா! - உன்னை நம்பித்தான் எழுத போறேம்பா! தேளுன்னு சொன்ன பிறகும் கொடுக்கை காட்டுன்னு கையவைக்குறது நல்லதில்லேப்பா! அவ ஒரு முடிவோட போயிருக்கா! இங்கே வந்து ஏமாந்தா...என் கதி என்ன ஆகும் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/75&oldid=777140" இலிருந்து மீள்விக்கப்பட்டது