பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 40 வல்: அனுமாரு உனக்குக் கிடைச்சாச்சு. இனிமே கவயை விடும்மா.... சுந்தரி! ஏதாவது புதுசா புத்தகம் இருந்தா கொடேன்! வாங்கலாம்ன்னு வந்தேன்... இருந்தா கொடும்மா... நீ கொடுத்த புத்தகம் ரொம்ப நல்லாயிருந்தது, தாங்ஸ் (புத்தகத்தைத் தர அவள் வாங்கி கொள்கிருள்) கந்: வரதனை பார்த்தீங்களா! மனுஷாளுக்கு வேகம் இருந்தா மட்டும் போதுமா! விவேகம் வேண்டாமா எங்கே மீட்டிங்ன்னு தெரியாம இவரு எப்படித் தேடி கண்டு பிடிப்பாரு? வேல்: ஆமாம்! அட மடப்பயலே! இப்படி ஒருத்தன் இருப்பான! சுந்தரி! எந்த இடம்னு சொல்லு! நான் போய் பார்த்துட்டு வர்றேன். அவர் உனக்கு அப்பாவா இருக்கலாம்! ஆன எனக்கு தாய் மாமன் தெரியுமா...! கந்: ஆமாம்! இரத்த பாசம் எப்படின்னு எனக்குத் தெரியும் (கேலியாக சிரித்தவாறு) இந்தாங்க அழைப்பிதழ். வேல்; அழைப்பிதழை படித்தபடி .. வியாபார மேதை ஏகாம்பரம் தலைமை தாங்குகிருர், திருமதி ஏகாம்பரம் பரிசுகள் வழங்குவார். அடி சக்கை: உங்க அப்பா அம்மா புகழ் கன்னபின்னன்னு ஊரெல்லாம் பரவிகிட்டு இருக்கு. வர்ரேன். |வேல்முருகன் போனதும், சுந்தரி வீட்டிற்குள் வந்து கடிகாரத்தைப் பார்க்கிருள். புத்தகத்தை அங்கிருக்கும் மேசை மேல் வைத்துவிட்டு திரும்பும் பொழுது, ஏகாம்பரம் வேக வேகமாக வீட்டிற்குள் துழைகிருt)