பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 கட்டிக்கிட்டிங்க, உங்க வாழ்க்கை வரலாற்றை நானே சொல்லிட்டேன். போதுங்களா! புகழ் விளம்பரம்ன்ன ஒவ்வொருத் தருக்கு எவ்வளவு ஆசை? ம்...இதையே ரெக்கார்டு எடுத்துட்டா, போட்டுப் போட்டு கேட்க லாம். பட்டி தொட்டியெல்லாம் பேசிக்கும். அதை முதல்ல செய்யுங்க. ஏகாம் : என்னம்மா கிண்டல்!... பேரைப்பாரு சரஸ்வதியாம் சரஸ்வதி! சுந்தரி! நீ கேளும்மா! நான் படிக்காதவன் தான். பணம் சம்பாதிக்குற வேகத்துல, படிக்காம இருந்துட்டேன். அதுக்காக விட்டேன! நானும் முயற்சி செய்து கையெழுத்து போட கத்துக்கிட்டேன இல்லியா! சுந்தரி: அதையும் நான் தானேப்பா கத்துக் கொடுத்தேன்! கையெழுத்துப் போட மட்டும் தெரிஞ்சா போதும்னு சொல்றிங்களா! ஏகாம்: நாச்சிமுத்து மகன்! ஏகாம்பரம்னு சொல்றதுக்கு : நா. ஏன்னு கத்துகிட்டு. கையெழுத்துப் போட்டேன். சரஸ்: (சிரித்துக் கொண்டே பார்த்தவன் எல்லாம் நாயேன் னு படிச்சான். கூப்பிட்டவன் எல்லாம்... ஏகாம்: நாயேன்னு கூப்பிட்டான். ஏண்டி கப்சா உடுறே! என்னபண்றது?என் தலை எழுத்து அப்படி வந்துசேருதே. அதுக்காக விட்டேன! கஷ்டப்பட்டு கத்துக்கிட்டேன் . கையெழுத்தை முழுசா போட்டேன். புஸ்தகம் படிக்க ஆரம்பிச்சேன், இப்ப மேடையேறி பேசவும் பேசுறேன் ! சரஸ்: ரொம்ப சந்தோஷம். படிக்காம படிச்ச மேதை அதிசயமான மேதைன்னு பட்டம் கொடுத்துட்டேன். போதுமா! சுற்தரி உள்ளே போய் தாம்பாளத்துல மஞ்சத்தண்ணி கொண்டுவந்து ஆரத்தி எடும்மா! அப்பதான் திருஷ்டி கழியும்,