பக்கம்:நலமே நமது பலம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

களிடையிலும் தம் குழந்தைகளைக் கவனித்துப் பராமரிக்க முடியாதபடி வேலைக்குப் போய் வருகின்றவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கின்றது.

குழந்தைகளும் குணநலன்களும்:

பள்ளிக்குச் செல்கிற குழந்தைகளின் வயது 5க்கும் 17க்கும் இடையில் இருப்பதை நாமெல்லாம் அறிவோம்.

இந்த இடைப்பட்ட வயதுக்குள்ளே குழந்தைகளின் தேகம் பல்வேறுபட்ட வளர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் இடம் கொடுத்து எழுச்சியடைவதையும் நாம் அறிவோம். -

பிறந்த குழந்தை ஆண்டு ஒன்றுக்கு 6 பவுண்டு எடையும் 18 அங்குல உயரமும் கொண்டதாக வளரத் தொடங்குகிறது.

5 ஆண்டுகளுக்குள்ளாக 50 பவுண்டு எடையும் 45 அங்குல உயரமும் உள்ளதாக வளர்ந்து விடுகிறது.

இப்படியாக, பதினெட்டு வயதுக்குள்ளாக அதிகபட்ச உயரத்தை ஒவ்வொரு குழந்தையும் எட்டி விடுகிறது. ஒருவருக்கு உயரமாக வளர்கின்ற சக்தி 25 வயது வரைதான் உண்டு. அதற்குப் பிறகு உயரமாக வளர்வது தடைபட்டுப் போகிறது.

நமது நாட்டில் உள்ள பெண் குழந்தைகள் எல்லோரும், ஏறத்தாழ 13 வது வயதில் பூப்பெய்தி (lenstruation) விடுகின்றனர். அதே சமயத்தில் ஆண்களுக்குரிய ஆண்மை சக்தி 15 வயதிலிருந்து தொடங்குகிறது என்று உடற்கூறு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தக் குறிப்புகளை ஏன் இங்கு நாம் கொடுத்திருக் கிறோம் என்றால், குழந்தைகள் பெரியவர்களாகும் காலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/66&oldid=693248" இலிருந்து மீள்விக்கப்பட்டது