பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கல்யாணத்துக்கு முன்னே அம்மா அப்பா துணை. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் புருஷனேட துணை. அப்புறம் தன்ைேட குழந்தைங்களோட துணை. இப்ப உனக்கு புருஷனேட துணைதான் தேவை! லட்சுமி துணை வேணும்ன, அது புருஷன் துணையாதான் இருக்கணுமா? யார் சொன்னது சுத்த ஒன்ம்ை நம்பர் பைத்தியக்காரத்தனம். கிதா : உலகம் புரியாத பொண்ணு இருக்குறியேடி. உனக்கு உறவுகள் எத்தனை தான் இருந்தாலும் கணவன்ங்கற. உறவுலதான் அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும். லட்சுமி இல்லேண்ணு. கீதா : இல்லேண்ணு... சந்தர்ப்ப சூழ்நிலையெல்லாம் உனக்கு எதிராவே அமையும். நீ எத்தனைதான் மனசாட்சிக்கு விரோதமா போகாம, உண்மையது நடந்தாலும், அந்த உண்மையே, உனக்கு உண்மையில உதவி செய்யாது! தெரியுமா? லட்சுமி : எனக்குதான் என் அப்பா இருக்காரே! என்ைேட அப்பாவின் துணையும் நம்பிக்கையும் இருந்தா, எனக்கு. அதுவே போதும். கிதா : உச்சி வெயில்ல, பனை மரத்து நிழலு எப்படிடி உதவ. முடியும்? ஆலமரம் போல நிழல் வேணும்ன, அது கல்யாணத்தின் மூலமாதான் கிடைக்கும். நான் வாழ்க்கையில் பட்ட அனுபவத்தைச் சொல்றேன். வர்ரேன் லட்சுமி. தாகத்துக்கு தண்ணிர் கொடுத்தே... தீர்க்க சுமங்கலியா நீடுழி வாழனும், வர்ரேன். லட்சுமி : (தனியே) கதவை திறந்து த ண் ணி ர் கொடுத்ததுக்கு, கல்யாண உபதேசம் பண்ணிட்டு போரு! பெண்களுக்கு நல்லா புடிச்சிருக்கு புருஷன் பைத்தியம். சே! (கதவை சத்தத்துடன் மூடுகிருள்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/36&oldid=777097" இலிருந்து மீள்விக்கப்பட்டது