பக்கம்:நலமே நமது பலம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஏற்பட்டால் இரத்தக்குறைவு ஏற்பட்டு, இரத்தச்சோகைநோய் உண்டாகி விடுகிறது.

பெண்களுக்குக் கர்ப்பம் உண்டாகும்போது தாறு மாறான வகையில் ஏற்படவும் செய்கிறது. கர்ப்பமடைந்த பெண்களுக்கு K வைட்டமின் மிகவும் அவசியமாகும். கொழுப்புப் பொருட்கள், பசலிக் கீரைகள், பசுங் கீரை வகைகள், கறிவகைகள் இவற்றில் நிறையக் கிடைக்கின்றன.

வைட்டமின் B:

B1, B2, B3, B4 என்று பலவகைப் பெயர்களில் இவ் வைட்டமின் இடம் பெற்றிருக்கின்றது. நரம்புகளை வலிமைப்படுத்தவும் நீரோட்டத்தை உடலில் கட்டுப் படுத்தவும் B வைட்டமின் உதவுகிறது.

பெரிபெரி என்ற நோய், வைட்டமின் B சத்துக் குறைகிறபோது ஏற்படுகிறது. அதாவது நீர் அதிகமாக உடலில் தேங்குகிறபோது இந்நோய் உண்டாகிறது. இதனால் இதயம் பலஹீனமடையும்படி நேரிடுகிறது.

பால், பழங்கள், பாலாடைக் கட்டிகள், கறிவகைகள் மற்றும் காய்கறிகளில் நிறையக் கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசி, கோதுமை, தினை போன்றவற்றிலும் கிடைக்கிறது.

B2 வைட்டமின் சிறந்த ஜீரண சத்திக்கும், நரம்புகளின் வலிமைக்கும், தோலின் தரத்திற்கும் நன்கு உதவி செய்கிறது. இந்த சத்துக் குறைகிறபோது பெல்லகரா என்ற நோய் ஏற்படுகிறது.

இந்த பெல்லகரா நோயானது இப்படித்தான் வருகிறது. மன உலைச்சலையும், தோல் வியாதிகளையும், அஜீரணத்தையும் வாய்ப்புண்களையும் உண்டாக்கி விடுகிறது. பால், முட்டைகள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் நிறைய கிடைக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/90&oldid=694984" இலிருந்து மீள்விக்கப்பட்டது