பக்கம்:நலமே நமது பலம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் - 91

பெரும்பாலான கிராமங்களில் ஏரி, குளத்திலுள்ள தண்ணிர் குடிநீராகப் பயன்படுகிறது. இந்த ஏரி குளங்களில் மக்கள் இறங்கிக் குளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காவலர்களைப் போட்டுக் காக்க வேண்டும். தண்ணிரில் இறங்கி நீர் மொள்ளாமல் கண்காணிக்க வேண்டும். அப்பொழுதுதான் தூய்மையான நீர் கிடைக்கும்.

ஊற்றாகக் கிடைக்கும் நீர் சில சமயங்களில் உப்புக் கரிப்பது போல இருக்கும். அதில் அதிகமான உப்பும் உலோகச் சத்தும் கலந்திருப்பதுதான் காரணம்.

இப்பொழுதெல்லாம் கிராமங்களிலும் நகரங்களிலும் பாதுகாக்கப்பட்ட தொட்டிகளில் நீர் நிரப்பி வைத்து வழங்கப்படுகிற முறை பின்பற்றப்படுகிறது.

தண்ணிர் தூய்மையாக இருந்தால் நோய்கள் ஏற்படாது. இல்லையேல் காலரா, வாந்தி, பேதி மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட்டு விரைவாகப் பரவ வழி வகுத்துவிடும்.

நலமே நமது பலம் என்ற உள்ளத்து உணர்வுடன், நல்ல செயல்களை ஒழுக்கமுடன் பின்பற்றி வாழ்கிற எவருக்கும் இனிமையான வாழ்வும் இளமையான மனதும் என்றும் தொடரும், துணை வரும், இன்பமே நல்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/93&oldid=694989" இலிருந்து மீள்விக்கப்பட்டது